2017ம் ஆண்டின் சிறந்த டிவிட் எது தெரியுமா? பாருங்க, அசந்துருவீங்க
டிவிட்டரில் 'நஹ்ஹட்ஸ்' என்ற சாப்பாடு வகை கேட்டவர் வித்தியாசமான வகையில் வைரல் ஆகியிருக்கிறார்.
Recommended Video

நியூயார்க்: டிவிட்டரில் 'நஹ்ஹட்ஸ்' என்ற சாப்பாடு வகை கேட்டவர் வித்தியாசமான வகையில் வைரல் ஆகியிருக்கிறார். அவர் சாப்பாடு கேட்ட டிவிட் தான் இந்த வருடத்திலேயே அதிக அளவில் ரீ டிவிட் ஆகி இருக்கிறது.
அதேபோல் அவர் அந்த டிவிட்டின் மூலமாக அமெரிக்காவின் பல முக்கிய பிரபலங்களை மிஞ்சி இருக்கிறார். அவரின் அந்த டிவிட்டுக்கு பின் வித்தியாசமான கதை ஒன்றும் இருக்கிறது.
அந்த டிவிட் தற்போதும் ரீ டிவிட் செய்யப்பட்டு வருகிறது. அந்த டிவிட்டின் நோக்கம் நிறைவேறும் அவரை அது ரீ டிவிட் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த வருடம் முடிவதற்குள் அந்த டிவிட் இன்னும் அதிக அளவில் ரீ டிவிட் ஆகி இருக்க வேண்டும்.

நஹ்ஹட்ஸ் வேணும்
அமெரிக்காவில் மிகவும் பேமஸான உணவு பொருட்களில் ஒன்று 'சிக்கன் நஹ்ஹட்ஸ்'. சிக்கனில் செய்யப்பட்ட மிருதுவான பக்கோடா போல இருக்கும் இந்த உணவுப் பொருளுக்கு அமெரிக்கர்கள் அடிமை. அதன்படி 'வெண்டிஸ்' எனப்படும் நிறுவனத்திடம் ''கார்ட்டர் வில்க்கர்சன்' என்பவர் வித்தியாசமான கோரிக்கை வைத்து இருந்தார். ஒரு வருடம் முழுக்க இலவசமாக எனக்கு சிக்கன் நஹ்ஹட்ஸ் வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு இருந்தார்.
|
சவாலுக்கு சவால்
இந்த நிலையில் முதலில் அவரின் கேள்விக்கு வெண்டிஸ் உணவகம் பதில் சொல்லவேயில்லை. பின் அவரிடம் அந்த நிறுவனம் ஒரு சவால் விட்டது. அதன்படி உங்களுடையே டிவிட் 18 மில்லியன் ரீ டிவிட் ஆகிவிட்டால் கண்டிப்பாக ஒரு வருடம் முழுக்க உங்களுக்கு இலவசமாக சிக்கன் நஹ்ஹட்ஸ் வழங்கப்படும் என்று கூறியது. மேலும் ஒரு வருடத்திற்குள் அந்த சாதனையை எட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தது.

சவாலில் தோல்வி
இந்த நிலையில் தற்போது டிசம்பர் மாதம் வரை அவரது டிவிட் மொத்தம் 3.6 மில்லியன் ரீ டிவிட் ஆகி உள்ளது. இன்னும் இந்த வருடம் முடிய கொஞ்ச நாட்களே இருப்பதால் அவரால் கண்டிப்பாக 18 மில்லியன் ரீ டிவிட் தொட முடியாது என்று கூறப்படுகிறது. எனவே அவர் இந்த சவாலில் அவர் தோற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
|
வேற லெவல்
இந்த நிலையில் தற்போது இவர் வேறு விதமாக வைரல் ஆகி இருக்கிறார். இந்த வருடத்தில் அதிகம் ரீடிவிட் ஆகிய டிவிட்டில் அவருடைய டிவிட் தான் முதல் இடத்தில் இருக்கிறது. உலகின் முக்கிய பிரபலங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு அவர் இந்த சிறப்பை பெற்று இருக்கிறார். அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் நிற பாகுபாடு குறித்த அழகான டிவிட் ஒன்று 1.7 மில்லியன் முறை ரீ டிவிட் ஆகி இரண்டாம் இடத்தில் உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications