பாகிஸ்தானில் சிறுபான்மையின சிறுமி கடத்திக்கொலை... அரசுக்கு, மனித உரிமை ஆணையம் பிரஷர்!
லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சிறுபான்மை சிறுமி கடத்தி கொல்லப்பட்டாள்.
இறந்த சிறுமிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் அரசை வலியுறுத்தியுள்ளன.
பாகிஸ்தானில் சிறுமிகள் கடத்தல் தொடர்பாக ஒரு நாளைக்கு 8 முதல் 10 வழக்குகள் பதிவாவதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுமி கடத்தல்
பாகிஸ்தானின் பைசலாபாத்தின் லியாகத் டவுனில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே இஷால் அப்சல் என்ற சிறுமி ஜனவரி 6-ம் தேதி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் இஷால் அப்சலை கடத்தி சென்றனர்.

உடலை மீட்டனர்
இது குறித்து பைசலாபாத்தின் ஜரன்வாலா சாலையில் உள்ள சதார் காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். சம்பவம் நடந்த மறுநாள் அப்பகுதியில் உள்ள குளம் அருகே இஷாலின் உடலை போலீசார் மீட்டனர.

விசாரணை
இது குறித்து இஷாலின் தந்தை அப்சல் மாசிஹ் பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைப்பு அலுவலகத்துக்கு சென்று விவரங்களை தெரிவித்தனர். மேலும் பைசலாபாத்தில் உள்ள அமர்வு நீதிமன்றத்தையும் நாடினார்.மனித உரிமை அமைப்பு குழுக்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பாலியல் பலாத்கார முயற்சிகளுக்குப் பிறகு ஐந்து மணி நேரத்திற்கு முன்னர் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டார் என்று ஆரம்ப மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. இது தொடர்பாக 2 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரித்தனர். பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்கதையாக உள்ளது
பாகிஸ்தானில் இந்து, கிறிஸ்தவ மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. சிறுமிகள் கடத்தல் தொடர்பாக ஒரு நாளைக்கு 8 முதல் 10 வழக்குகள் பதிவாவதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அளித்து, இந்த வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் வலியுறுத்தி உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications