இதுக்கெல்லாமாய்யா போட்டி வப்பீங்க... 18 வயசுக்கு மேற்பட்டோர் மட்டும் படிங்கப்பா ப்ளீஸ்..!
ப்ரூக்ளீன்: அமெரிக்கர்களின் குசும்புக்கு லிமிட் இல்லாமல் போய் விட்டது போங்க. எது எதற்கோ அழகுப் போட்டி நடத்துகிறார்கள். ஆனால் இவர்கள் எதைப் பற்றி போடடி நடத்தியிருக்கிறார்கள் பாருங்க.
சிகையலங்காரம் பற்றி போட்டி நடத்தியதை பார்த்திருக்கிறோம். முக வசீகரம் குறித்தும் கூட போட்டிகள் நடந்துள்ளன. அழகிய இதழ்கள்.. அதாங்க உதடு குறித்து கூட போட்டி நடத்தியுள்ளனர். ஒட்டுமொத்தமாக அழகிப் போட்டி நடத்துகிறார்கள்.. மிஸ் முடக்கததான் சாலை என்ற ரேஞ்சுக்கு போட்டிகள் போய் விட்டன. சிறந்த நீச்சல் உடை போட்டி கூட நடந்துள்ளது.
ஆனால் தற்போது மனித உடம்பைப் பார்ட் பார்ட்டாக பிரித்து அழகுப் போட்டிகள் நடத்தக் கிளம்பி விட்டனர்.

சிறிய ஆணுறுப்புக்கான போட்டி
அமெரிக்காவில் ஒரு வினோதமான போட்டி நடந்துள்ளது. அதாவது மிகச் சிறிய ஆணுறுப்புக்கான போட்டிதான் அது. ப்ரூக்ளீனைச் சேர்ந்த கிங்ஸ் கவுன்டி சலூன்தான் இந்தப் போட்டியை நடத்தி பரிசையும் கொடுத்துள்ளது. இது 3வது வருடாந்திர சிறிய ஆணுறுப்புக்கான போட்டியாகும். பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் இதில்.

இதுக்கும் ஒரு போட்டி
அது மட்டுமா, ஆட்டோ ப்ளோ எனப்படும், பெண்களுக்கான செயற்கை உடலுறவு சாதனத்தைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, அமெரிக்காவின் மிக அழகிய பெண்ணுறுப்புக்கான போட்டியை நடத்தப் போகிறதாம்.

பம் பம் போட்டி
மேலும் பிரேசிலில் மிஸ் பம் பம் போட்டி நடைபெறவுள்ளது. அதாவது அழகிய பின்புறம் கொண்ட பெண்களுக்கான போட்டி இது.

சலூன் கடை சண்முகம் நடத்தும் போட்டி
கிங்ஸ் கவுன்டி சலூன் நிறுவனமானது கடந்த 2013ம் ஆண்டு முதல் சிறிய ஆணுறுப்புக்கான போட்டியை நடத்தி வருகிறது. இதற்கு வருடா வருடம் கூட்டமும் கூடி வருகிறதாம்.

அமி பட்ட பாடு
இதுகுறித்து அந்த சலூனின் உரிமையாளரான ஜெஸ் லெவிட் கூறுகையில், எனது பிசினஸ் பார்ட்னர் அமி, தனது காதலருடன் உடலுறவில் ஈடுபட்டபோது மோசமான அனுபவத்தைச் சந்தித்தார். காரணம், அவரது காதலருக்கு பெரிய சைஸ் ஆணுறுப்பு இருந்ததால் இவர் சிரமப்பட நேரிட்டு விட்டது.

குவாலிட்டி முக்கியமாச்சே
சிறிய ஆணுறுப்பு உள்ளவர்களால்தான் படுக்கை அறையில் அதிக நேரத்தை செலவிட முடியும், பெண்களுக்கும் உற்சாகத்தைத் தர முடியும் என்பது அமியின் கருத்தாகும். இதை அடிப்படையாக வைத்தே இந்தப் போட்டியை அறிமுகப்படுத்தினோம்.

நம்பிக்கை பாஸ் நம்பிக்கை
இது சைஸ் குறித்த போட்டியல்ல. மாறாக தன்னம்பிக்கை குறித்த போட்டியாகும். சிறிய ஆணுறுப்பு கொண்டவர்களால் சிறப்பாக உறவில் ஈடுபட முடியும் என்ற தன்னம்பிக்கை வர வேண்டும். அதை வலியுறுத்தியே இந்தப் போட்டி நடத்தப்படுகிறது என்றார்.

ஜெயிச்ச பஸ்ஸில் மாஸ்டர்!
இந்த ஆண்டு இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவருக்கு செல்லமாக பஸ்ஸில் மாஸ்டர் என்று பெயர் வைத்துள்ளனராம்.

அளவோடு தரமும் பார்க்கப்படும்
இதுகுறித்து மேலும் லெவிட் கூறுகையில் இது அளவு குறித்த விஷயம் மட்டுமல்ல, தரமும் இங்கு கணக்கில் கொள்ளப்படுகிறது. அளவை மட்டும் வைத்து நாங்கள் பட்டம் சூட்டுவதில்லை. குவாலிட்டியும் பார்க்கப்படும் என்றார்.

ஆட்டோ ப்ளோ
அதேபோல அழகிய பெண்ணுறுப்புக்கான போட்டியை நடத்தும் ஆட்டோப்ளோ சாதனம் தயாரிக்கும் வெரி இன்டல்லிஜென்ட் இகாமர்ஸ் நிறுவனத்தின் அதிபரான பிரையன் ஸ்லோன் கூறுகையில், இது பெண்ணுறுப்பு அழகாக இருப்பதை மட்டும் அடிப்படையாகக் கொண்ட போட்டி அல்ல. மாறாக, எங்களது தயாரிப்பின் தரத்தை வெளிக் கொணரும் போட்டியுமாகும்.

15 பெண்கள்.. பெயர் விவரம்.. மூச்
இந்தப் போட்டியில் தற்போது 15 பெண்கள் கலந்து கொண்டுள்ளனராம். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை இவர்கள் பயன்படுத்திப் பார்ப்பார்கள். அந்தத் தயாரிப்புகள் எந்தப் பெண்ணிடம் சிறப்பான முறையில் இயங்குகிறதோ அவரே வெற்றியாளர் ஆவார். முதல் பரிசு 5000 டாலர். 2வது பரிசு 2500 டாலர். 3வது பரிசாக 1500 டாலர்கள் தருவார்களாம்.

பிரைவசி முக்கியம்
ஆனால் போட்டியில் பங்கேற்கும் பெண்கள் குறித்தும், வெற்றியாளர்கள் குறித்தும் வெளிப்படையாக அறிவிக்க மாட்டார்களாம். காரணம் அவர்களின் பிரைவசியை நாங்கள் விற்பனையாக்க விரும்பவில்லை என்கிறார் ஸ்லோன்.
வெளங்கீரும்டா!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications