வியர்வை தாங்க முடியாமல் விமானத்தின் அவசர கால கதவை திறந்த பயணி.. கடைசியில் சுதாரித்த விமானி!
சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து விமானம் ஒன்று புறப்படும் சமயத்தில் விமானத்தில் இருந்த நபர் ஒருவர் அவசர கால கதவுகளை திறந்து இருக்கிறார்.
பெய்ஜிங்: சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து விமானம் ஒன்று புறப்படும் சமயத்தில் விமானத்தில் இருந்த நபர் ஒருவர் அவசர கால கதவுகளை திறந்து இருக்கிறார்.
இதனால் விமானத்திற்குள் மிகவும் அதிக அளவில் காற்று வீசி இருக்கிறது. விமானம் இன்னும் கொஞ்சம் அதிக வேகத்தில் சென்று இருந்தால், உள்ளே இருந்த பயணிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும்.
அவர் ஏன் இப்படி அவசர கால கதவுகளை திடீர் என்று திறந்தார் என்று விளக்கம் அளித்துள்ளார். தற்போது போலீஸ் இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இறங்கினார்
விமானம் சரியாக புறப்படும் சமயத்தில் சென் என்ற நபர் விமானத்தின் அவசர கதவுகளை திறந்து இருக்கிறார். அவசர வாயில் வழியாக வெளியே செல்ல முயற்சி செய்து இருக்கிறார். இதை பார்த்த விமான பணிப்பெண்கள் உடனடியாக, விமான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள். பின் விமானிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் நிறுத்தப்பட்டது.

ஜன்னலை திறக்க முயற்சி
இதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார். ஜன்னலை திறப்பதாக நினைத்துக் கொண்டு அவர் அவசர கதவுகளை திறந்ததாக கூறியுள்ளார். கதவை திறந்த பின்தான், அது அவசர வழி என்று தெரியும் என்று கூறியுள்ளார். ஆனாலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அவர் நிறைய பயணிகளுக்கு இடைஞ்சலாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

போலீஸ் தண்டனை
இந்த நிலையில் அந்த பகுதிக்கு உடனடியாக விமான பாதுகாப்பு அதிகாரிகள் வந்து அவரை கைது செய்தார்கள். மற்ற பயணிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இவருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

மோசமான விளக்கம்
அவர் ஜன்னலை திறந்ததற்கு விசாரணையின் போது விளக்கம் அளித்துள்ளார். விமானத்திற்குள் மிகவும் சூடாக இருந்ததாகவும், வியர்த்ததாகவும், காற்று வர வேண்டும் என்று ஜன்னலை திறந்ததாகவும் கூறியுள்ளார். இவரால் நேற்று மட்டும் மூன்றுக்கும் அதிகமான விமானங்கள் கால தாமதம் ஆகியுள்ளது. விமானி மட்டும் சுதாரிக்கவில்லை என்றால் நேற்று அந்த சீன விமானத்தில் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications