பாதரசத்தால் வீராங்கனைக்கு கட்டம் கட்டிய ரஷ்ய பெண்.. செஸ் போட்டியில் வெல்ல இப்படியா? திடுக் சம்பவம்
மாஸ்கோ: ரஷ்யாவில் செஸ் போட்டியில் வெல்ல பெண் ஒருவர் தன்னை எதிர்த்து விளையாடும் வீராங்கனையின் மேஜை மற்றும் அவரது காய்கள் இடம்பெறும் செஸ் போர்ட்டின் இடங்களில் பாதரசம் ஊற்றி வைத்ததும், அந்த வீராங்கனை உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் வீராங்கனையை வீழ்த்த அந்த பெண் ஏன் பாதசரத்தை தேர்வு செய்தார்? அந்த பெண் சிக்கியது எப்படி? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஷ்யாவின் ஒரு பகுதியாக தாகெஸ்தான் உள்ளது. அஜர்பைஜானின் வடக்கே காஸ்பியன் கடலில் இந்த தாகெஸ்தான் அமைந்துள்ளது. இங்கு மகச்சலா என்ற இடம் உள்ளது. இங்கு தான் மண்டல அளவிலான செஸ் போட்டிகள் என்பது நடந்து வந்தது.

இந்தபோட்டியில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் 30 வயது நிரம்பிய உமைகனாட் ஒஸ்மானோவா மற்றும் 40 வயது நிரம்பிய அமினா அபகரோவா ஆகியோரும் பங்கேற்று இருந்தனர்.
இந்த போட்டியில் உமைகனாட் ஒஸ்மானோவா மற்றும் அமினா அபகரோவா ஆகியோர் இடையே போட்டி வந்தது. இந்த போட்டிக்கு செஸ் போர்ட் அனைத்து தயாராக இருந்தது. இந்த வேளையில் தான் அமினாவுக்கு மனதில் தோல்வி பயம் வந்துள்ளது. உமைகனாட்டிடம் தோற்று விடுவோமோ? என்று அவர் அஞ்சினார். இதனால் அவர் உமைகனாட்டியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து அமினா அபகரோவோ தன்னை எதிர்த்து விளையாடும் வீராங்கனை உமைகனாட்டி அமரும் மேஜை, செஸ் போர்ட்டுகளில் பாதரசத்தை தடவி வைத்துள்ளார். போட்டி நடக்கும் அரங்கில் யாரும் இல்லாதபோது முன்கூட்டியே நுழைந்து அமினா இந்த வேலையை செய்தார். அதன்பிறகு அந்த இடத்தில் இரந்து விளையாடிய உமைகனாட்டி திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
செஸ் போர்டு மற்றும் மேஜையில் தடவியிருந்த பாதரசம் அவர் கைகளில் படிந்தது. விளையாட்டின்போது யோசிக்கும்போது அவர் கைகளை முகத்தில் ஆங்காங்கே கொண்டு சென்றார். இதனால் வாய்க்குள்ளும் பாதரசம் சென்றது. அப்போது அவர் இரும்பை உருக்குவது போன்று உணர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி நாக்கில் வேறு விதமான உணர்வை அவர் பெற்றார். ஆனாலும் அவர் அதனை பெரிதாக கொள்ளவில்லை.
ஆனால் அடுத்த சிறிது நேரத்தில் உமைகனாட்டி உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே தான் மருத்துவ பரிசோதனையில் அவரது உடலில் பாதரசம் படிந்து இருப்பது தெரியவந்தது. மேலும் செஸ் அரங்கத்தில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அமினா தான் உமைகனாட்டியின் மேஜை மற்றும் அவரது காய்கள் இருக்கும் செஸ் போர்ட்டின் ஒரு பகுதியில் பாதரசத்தை தடவியது தெரியவந்தது. இதையடுத்து அமினாவை கைது செய்ய போலீசார் முயன்று வருகின்றனர்.
பொதுவாக இத்தகைய பாதரசம் என்பது நேரடியாக தோல் மற்றும் குடலால் உறிஞ்சப்படாது. மாறாக பாதரசம் தடவப்பட்ட இடத்தில் இருந்தால் இருமல், சுவாசக்கோறாறு, குமட்டல், ஈறுகளில் ரத்த போக்கு, நாக்கில் சுவை மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் தான் அமினா, உமைகனாட்டிக்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்தும் நோக்கத்தில் பாதரசத்தை செஸ் போர்ட்டில் தடவியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதுபற்றி பாதிக்கப்பட்ட உமைகனாட்டி கூறுகையில், ‛‛நான் செஸ் விளையாட சென்றபோது எனது மேஜை மற்றும் காய்கள் உள்ள இடத்தில் சிறிய சாம்பல், வெள்ளி துளிகள் உருளுவதை பார்க்க முடிந்தது. மேலும் வித்தியாசமான ஸ்மெல் வந்தது. நாக்கின் சுவையும் மாறியது. ஆனால் நான் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. உடல்நலக்குறைபாடு ஏற்பட்டபோது தான் பாதரசம் தடவப்பட்டு இருப்பதை அறிந்தேன். நான் அந்த இடத்தில் 5 மணிநேரம் வரை விளையாடிய நியைில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது'' என்றார்.
இதுபற்றி இங்கிலாந்து செஸ் சம்மேளனத்தில் சர்வதேச செஸ் இயக்குநர் மால்கம் பெயின் கூறுகையில், ‛‛இதுபோன்ற ஒரு சம்பவத்தை நான் இதற்கு முன்பு பார்த்தது இல்லை. பொதுவாக செஸ் போட்டியில் விளையாடுபவர்கள் தங்கள் மனதை உளவில் ரீதியாக கட்டுப்படுத்துவார்கள். மாறாக எதிர்த்து விளையாடும் வீராங்கனையை கொல்ல நினைப்பது என்பது இது வரலாற்றிலேயே முதல் முறையாகும்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications