இந்தோனேசியா, பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்… பொதுமக்கள் பீதி
படாங்:இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.
அந்நாட்டின் மேற்கு சுமத்ரா முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நில நடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த முறை சுனாமி ஏற்பட்டு உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மென்ட்டாவாய் மாவட்டத்துக்குட்பட்ட கேபுலவான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகமாக உணரப்பட்ட இவ்விரு நிலநடுக்கங்களால் மக்கள் பீதி அடைந்தனர்.
தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி, தெருக்கள் உள்ளிட்ட திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் எவ்வித சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. நில நடுக்கத்தால் உண்டான சேதம் மற்றும் இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்தோனேசியாவை தொடர்ந்துபப, பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications