Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுடுகாட்டில் எரிப்பதற்கு ஒரு சில நொடிக்கு முன்பு அசைந்த உடல்..நொடிப்பொழுதில் மகள் செய்த சாமர்த்தியம்

Subscribe to Oneindia Tamil

பியுனோஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவில் ஒரு பெண் தகனம் செய்யப்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்பே தனது தாய் உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் உயிர் பிழைத்தார்.

அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் ஒரு மூதாட்டி.பெயர் தெரியவில்லை. 89 வயது. கடந்த சனிக்கிழமை நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து தனது தாயை அவரது 54 வயது மகள், வடகிழக்கு அர்ஜென்டினாவின் ரெசிஸ்டென்சியா என்ற நகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

அடுத்த நாள், அந்த ஆஸ்பத்திரியின் மருத்துவர்கள் அவரது மகளிடம் இறந்துவிட்டதாக கூறி இறப்பு சான்றிதழை வழங்கி உள்ளார்கள். மாரடைப்பு காரணமாக உங்கள் தாய் இறந்துவிட்டார்கள் என மருத்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

தகனம் செய்ய முடிவு

தகனம் செய்ய முடிவு

இதையடுத்து அந்த பெண் தன் தாயை தகனம் செய்வதற்காக வெலெஸ் சார்ஸ்பீல்ட் அவென்யூவில் உள்ள தகன மையத்திற்கு கொண்டு சென்றார் இறுதி சடங்கு வேலைகள் நடந்து கொண்டிருந்தது.

அசைவுகள் தெரிந்தன

அசைவுகள் தெரிந்தன

இறுதிச் சடங்கின் போது தகனம் செய்யும் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. தகனம் செய்வதற்காக க்ண்வேயரில் பெல்டில் அனுப்பிக்கொண்டிருந்தார்கள். தகனம் செய்ய ஒரு சில நொடிக்கு முன் தன் தாயார் உயிருடன் இருப்பதற்கான அறிகுறி இருப்பதை அவரது மகள் கண்டுபிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக தகனம் செய்வதை நிறுத்துமாறு ஊழியர்களிடம் சொன்னார்.

சிகிச்சை பெறுகிறார்

சிகிச்சை பெறுகிறார்

இதையடுத்து தன் தாயை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு பறந்தார். தற்போது தனியார் மருத்துவமனையில் 89 வயது மூதாட்டி சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து மூதாட்டியின் மகள் மருத்துவமனையின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். போலீசிடம் புகாரும் அளித்தார். இதையடுத்து போலீசார், இறந்து போனதாக தவறாக இறப்பு சான்றிதழ் அளித்த மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்

அதிசயம்

அதிசயம்

இறுதிச் சடங்கின் போது தகனக் கூடத்தில் கன்வேயர் பெல்ட் வழியாக அனுப்பத் தயாரானபோது, ஒரு சில நொடியில் தாயிடம் அசைவு இருப்பதை மகள் பார்த்த காரணத்தால் 89வயது தாயார் உயிர் தப்பி உள்ளார். இறந்துவிட்டதாக மருத்துவமனை கூறிய பின்னர் மூதாட்டி உயிர்பிழைத்து அர்ஜெண்டினாவில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+