மிரட்டிய டிரம்ப்! முடிவுக்கு வருகிறதா உக்ரைன் - ரஷ்யா போர்? மனம் மாறிய புதின்.. நடப்பது என்ன?
மாஸ்கோ: உக்ரைனுக்கும் - ரஷ்யாவுக்கும் இடையே 30 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா முன்மொழிந்த நிலையில், இதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு ரஷ்யாவும் வந்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தத் திட்டத்திற்கு உடன்படுவதாகவும் ஆனால் சில கேள்விகள் இருப்பதாகவும் புதின் கூறியிருக்கிறார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் மூன்றாண்டுகளுக்கும் மேலாக சண்டை நீடித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டினார். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் உக்ரைனை அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசினார்.

ஆனால், இந்த பேச்சுவார்த்தை மோதலில் முடிந்தது. பேச்சுவார்த்தையின் போதே வெள்ளை மாளிகையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேறினார். இதன் தொடர்ச்சியாக உக்ரைனுக்கான ராணுவ, நிதி உதவிகளை நிறுத்துவதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து இறங்கி வந்த ஜெலன்ஸ்கி, 30 நாள் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய சம்மதம் தெரிவித்தார். ஆனால், ரஷ்யா இந்த விவகாரத்தில் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
மேலும், 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பல்வேறு கேள்விகளையும் ரஷ்ய மூத்த அதிகாரி எழுப்பியிருந்தார். இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், "போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா உடன்படாவிட்டால் பொருளாதர ரீதியான பாதிப்புகளை அந்த நாடு சந்திக்கும். இது ரஷ்யாவுக்கு பேரழிவை ஏற்படுத்தும் விதமாக இருக்கும்" என்றார்.
இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்படுவதாகவும், ஆனால், அதேவேளையில் நுணுக்கமான சில விவகாரங்கள் இருப்பதாகவும் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் கூறியிருப்பதாவது: - நிரந்தர அமைதி மற்றும் பிரச்சினைக்கான மூல காரணத்தை விவாதிக்க வேண்டும். போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன்பாக நிறைய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. இதில் சில நுணுக்கங்கள் உள்ளன.
போரை 30 நாட்களில் நிறுத்தினால், அங்கே இருப்பவர்கள் அனைவரும் போர் எதுவும் இன்றி வெளியேறிவிடுவார்களா? இந்த போர் நிறுத்தம் எவ்வாறு கண்காணிக்கப்படும். இவை எல்லாம் மிகவும் தீவிரமான கேள்விகள். இது தொடர்பாக அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேச வேண்டும் என நான் நினைக்கிறேன். டிரம்புடன் இது தொடர்பாக தொலைபேசியில் பேச வேண்டியிருக்கும்" என்றார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications