ரசிகைகளுடன் சேர்ந்து செல்பிக்கு போஸ் கொடுத்த பிரபல நடிகர் கைது... சவுதியில்!
ரியாத்: பொது இடத்தில் ரசிகைகளுடன் செல்பி எடுத்துக் கொண்டதற்காக குவைத்தைச் சேர்ந்த பிரபல நடிகரை சவுதி அரேபிய போலீஸார் கைது செய்துள்ளனர்.
குவைத்தில் பிரபல நடிகராக இருப்பவர் அப்துல் அஜிஸ் அல் கஸ்ஸார். சம்பவத்தன்று இவர் ரியாத் நகரில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் ஒன்றிற்கு சென்றிருந்தார். அப்போது ரசிகைகள் பலர் அவரைச் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்துக் கொண்டனர்.
இதைக் கண்ட அங்கிருந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டு கண்காணிப்பு ஆணையகத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், அப்துலை பிடித்து ஷாப்பிங் மாலில் இருந்து வெளியே இழுத்துச் சென்றார். அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சவுதி நாட்டு சட்டங்களின்படி, பொது இடங்களில் பெண்களுடன் பழகுவதும், புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இதனால், அப்துலை ஒரு காரில் ஏற்றி ஒழுக்கக் கட்டுப்பாட்டு கண்காணிப்பு ஆணையகத்தின் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக, வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பெண்களுக்கு நடுவில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் அப்துலை, வெள்ளை அங்கி அணிந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டு கண்காணிப்பு ஆணையகத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் இழுத்துச் செல்வது போல் காட்சிகள் அமைந்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications