இலங்கையில் சம்பவம் செய்த அதானி குழுமம்! ஓராண்டில் நடந்த பிரமாண்ட சாதனை!
கொழும்பு: இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் அதானி குழுமத்தின், 'கொழும்பு மேற்கு சர்வதேச முனையகம்' ஓராண்டிற்குள்ளேயே 10 லட்சம் TEU கன்டெய்னர்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
'கொழும்பு மேற்கு சர்வதேச முனையகம்' ₹6,700 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இதில் அதானி போர்ட்ஸ் (APSEZ), இலங்கையின் ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக ஆணையம் ஆகியவை கூட்டாக இணைந்துள்ளன. அதாவது இவர்கள் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இது இலங்கையில் அதானி குழுமம் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் செயல்பாட்டிற்கு வந்த இந்த முனையம், வெறும் ஓராண்டிற்குள் 10 லட்சம் TEU-களைக் கையாண்டுள்ளது. கொழும்பு துறைமுக வரலாற்றிலேயே இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த இலக்கை எட்டிய முதல் முனையம் இதுதான். பொதுவாக ஒரு முனையம் இந்த நிலையை அடைய பல ஆண்டுகள் ஆகும், ஆனால் அதானியின் திறமையான மேலாண்மையால் இது சாத்தியமாகியுள்ளது.
இது கொழும்பு துறைமுகத்திலேயே, முழுக்க முழுக்க தானியங்கி முறையில் இயங்கும் முதல் ஆழ்கடல் முனையமாகும். 1,400 மீட்டர் நீளமுள்ள தளம் மற்றும் 20 மீட்டர் ஆழம் கொண்டது. இதனால் உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்களை இங்கு எளிதாக நிறுத்த முடியும். இதன் மொத்தத் திறன் ஆண்டுக்கு 32 லட்சம் TEU ஆகும்.
ஏன் இது முக்கியம்?
இந்தியாவுக்கான பலன்: கொழும்பு துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளில் பெரும் பகுதி இந்திய வர்த்தகத்துடன் தொடர்புடையது. இந்த முனையத்தின் மூலம் இந்தியப் பொருட்கள் உலக நாடுகளுக்கு விரைவாகச் சென்றடையும்.
சர்வதேசப் போட்டி: கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளை இணைக்கும் முக்கிய கப்பல் பாதையில் இது அமைந்துள்ளதால், ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மையமாக இது உருவெடுத்துள்ளது.
அதானியின் உலகளாவிய தடம்: இந்தியாவின் பல துறைமுகங்களை இயக்கும் அதானி குழுமம், இந்தத் திட்டத்தின் மூலம் சர்வதேச அளவிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications