Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காபூல் விமான நிலையத்தில் தொலைந்த குழந்தை பல மாதங்களுக்கு பிறக மீட்பு

Subscribe to Oneindia Tamil
ஆப்கன்
Getty Images
ஆப்கன்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் அவசரத்தில் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்துக்கு இடையே தொலைந்து போன குழந்தை பல மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

காபூல் நகரம் தாலிபன்களின் வசம் சென்ற பிறகு, ஆப்கானிஸ்தானை விட்ட வெளியேற பல்லாயிரக்கணக்கானோர் விமானநிலையத்துக்கு விரைந்து கொண்டிருந்தபோது பிறந்து இரண்டு மாதமே ஆகியிருந்த, சோஹைல் அஹமதி என்ற அந்தக் குழந்தை காணாமல் போனது.

அந்த குழந்தையை காபூல் நகரைச் சேர்ந்த ஹமீத் சஃபி என்ற டாக்சி ஓட்டுநர் தனது வீட்டுக்கு கொண்டு சென்று பராமரித்து வந்திருக்கிறார். கடந்த நவம்பரில் குழந்தையின் புகைப்படத்துடன் ராய்ட்ர்ஸ் செய்தி வெளியிட்ட பிறகு அவரிடம் குழந்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக ஏழு வாரங்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இறுதியாக குழந்தையை காபூலில் இருக்கும் தாத்தா உள்ளிட்ட பிற உறவினர்களிடம் ஒப்படைத்தார் சஃபி.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் குழந்தையின் பெற்றோர், தங்களிடம் குழந்தையைச் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்த ஆகஸ்ட் மாதத்தில் குழந்தையின் பெற்றோர் காபூல் விமான நிலையத்துக்குள் நுழைய முயன்று கொண்டிருந்தனர். குழந்தையின் தந்தை மிர்சா அலி அஹமதி அமெரிக்கத் தூதரகத்தில் பாதுகாவலராகப் பணியாற்றியவர்.

விமான நிலையத்தில் அப்போது கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. இன்னும் சில மீட்டர் தொலைவில் விமான நிலைய வாயிலை நெருங்கிவிடலாம் என்று நிலையில், நெரிசலில் சிக்கி தனது குழந்தை நசுங்கிவிடக் கூடும் என்று அஞ்சிய அஹமதி, குழந்தையை வாயிலுக்கு உள்ளே இருந்த ஓர் அமெரிக்க வீரரிடம் கொடுத்திருக்கிறார்.

சித்தரிக்கும் படம்சில நிமிடங்களில் மீண்டும் குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம் என நினைத்திருந்தபோது, தாலிபன் படையினர் கூட்டத்தை வெளியே தள்ளினர். அதனால் வாயிலுக்குள் நுழைய மிர்சா தம்பதிக்கு அரைமணி நேரம் ஆகிவிட்டது. ஆனால் குழந்தையை காணவில்லை.

ஆப்கன்
Getty Images
ஆப்கன்

விமான நிலையம் முழுக்கத் தேடியும் பலன் கிடைக்கவில்லை. குழந்தை ஏற்கெனவே தனியாக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து, அஹமதி, அவரது மனைவி, நான்கு பிற குழந்தைகள் மட்டும் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நான்கு மாதங்களாகியும் தொலைந்துபோன குழந்தை எங்கே என்ற விவரம் தெரியவில்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தூதரகம் மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் செயல்படாததால் குழந்தையைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியவில்லை.

அஹமதி குடும்பத்தினரும் குழந்தையும் பிரிந்த அதே நாளில் தனது சகோதரரின் குடும்பத்தை விமான நிலையத்தில் விடுவதற்காக வந்திருந்தார் டாக்சி ஓட்டுநர் சஃபி. குழந்தை ஒன்று தரையில் அழுதபடி கிடப்பதைப் பார்த்திருக்கிறார்.

குழந்தையின் பெற்றோரைத் தேடியதாகவும், யாரையும் கண்டுபிடிக்க முடியாததால், குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும் சஃபி கூறுகிறார். தாய், மனைவி, மூன்று பெண் குழந்தைகளுடன் வசிக்கும் சஃபிக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பது அவரது அம்மாவின் விருப்பமாம்.

அதனால் குழந்தையை தாங்களே வளர்க்கலாம், குழந்தையின் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களிடம் ஒப்படைக்கலாம் என அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

குழந்தையின் புகைப்படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து, சஃபியின் அண்டை வீட்டுக்காரர்கள் அவர் விமான நிலையத்தில் இருந்து குழந்தையுடன் வந்தது பற்றி நினைவுகூர்ந்திருக்கிறார்கள்.

ஆப்கன்
Getty Images
ஆப்கன்

இதன் பிறகே குழந்தையின் இருப்பிடம் பற்றித் தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் தாத்தா ரஸாவி சஃபியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். ஆயினும் குழந்தையைத் தர சஃபி விரும்பவில்லை. இறுதியில் சஃபி மீது தாலிபன் காவல்துறையிடம் கடத்தல் புகார் அளித்தார் ரஸாவி.

இந்தப் புகாரை மறுத்த சஃபி, குழந்தையைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

இறுதியில் குழந்தையை 5 மாதங்களாகப் பராமரித்ததற்காக 950 அமெரிக்க டாலர் பணம் கொடுப்பது என்று உடன்பாட்டை ஏற்றுக் கொண்டு குழந்தையை ஒப்படைக்க சஃபி சம்மதித்தார்.

தற்போது குழந்தை அவரது தாத்தாவிடம் இருக்கிறது. குழந்தையை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அஹமதி தம்பதியினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+