சிந்து நதி நீரை விடுங்க.. பாகிஸ்தானுக்கு ஆப்பு வைக்க புது அணை கட்டும் ஆப்கானிஸ்தான்! உதவும் இந்தியா?
காபூல்: பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல் காரணமாக நம் நாடு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானின் பலகோடி கோடி மக்கள் பாதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் தான் நம் நாட்டை பின்பற்றி பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தும் வகையில் ஆப்கானிஸ்தான் அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு நம் நாடு உதவி செய்கிறதா? என்பது தொடர்பாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்பது உள்ளது. இந்த ஒப்பந்தம் என்பது கடந்த 1960ம் ஆண்டில் போடப்பட்டது. உலக வங்கி மத்தியஸ்தத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லெஜ் - 30% நீர்), பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப் - 70% நீர்) ஒதுக்கப்பட்டன.
இந்த ஒப்பந்தத்தின்படி நம் நாடு பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கி வந்தது. இந்த சிந்து நதி தண்ணீரை வைத்து தான் பாகிஸ்தான் வளம்கொழித்தது. பல கோடி மக்களின் வாழ்வாதாரமாக இந்த சிந்து நதி நீர் தான் விளங்கி வருகிறது. பாகிஸ்தானின் மக்கள்தொகையை மொத்தம் 23 கோடி தான் என்ற நிலையில் சிந்து நதி நீர் தான் அந்த நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
தற்போது நம் நாடு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் தான். கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 அப்பாவி சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதையடுத்து பஹல்காம் தாக்குதல் நடந்த உடனேயே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக நம் நாடு அறிவித்தது. தற்போது பாகிஸ்தான் நம்மிடம் தண்ணீர் கேட்டு கெஞ்சி வருகிறது. ஏனென்றால் சிந்து நதி நீர் இல்லாவிட்டால் பாகிஸ்தானில் விவசாயம் இருக்காது. மக்களுக்கு குடிநீர் பிரச்சனை என்பது ஏற்படும். இதனால் நம் நாட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் பாகிஸ்தான் தயாராகி வருகிறது. ஆனால் நம் நாடு சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்த செய்யப்பட்டது செய்யப்பட்டது தான். இனி மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க இன்னொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் வகையில் புதிதாக அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானில் இருந்து பலூசிஸ்தானை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வரும் போரளாி மிர் யார் பலூச் தனது எக்ஸ் பக்கத்தில் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், ‛‛பாகிஸ்தானுக்கான முடிவுக்காலம் என்பது தொடங்கி விட்டது. இந்தியாவுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்த ஆப்கானிஸ்தான் அணை கட்ட திட்டமிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தாலிபான் ஜெனரல் முபீன் சமீபத்தில் குனார் பிராந்தியத்தை பார்வையிட்டு அணை கட்டும் இடத்தை ஆய்வு செய்தார். அணை கட்டுவதற்கான பணத்தை திரட்டி பணியை தொடங்க வேண்டும் என்று முபின் தாலிபான் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்'' என்று கூறியுள்ளார்.
மேலும் முபின் ஆய்வு செய்யும் வீடியோவை மிர் யார் பலூச் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், ‛‛இந்த தண்ணீர் எங்களின் ரத்தம். இந்த ரத்தத்தை எங்களின் நரம்புகளுக்கு அப்பாற்பட்டு பாய விடமாட்டோம். இதனை தடுத்து நிறுத்தி மின்சாரம் தயாரிப்பு மற்றும் விவசாயத்துக்கு பயன்படுத்துவோம்'' என்று கூறியுள்ளதாக தெரிவித்துள்ளா். இந்த குனார் ஆற்றை எடுத்து கொண்டால் அது இந்து குஷ்மலையில் உற்பத்தியாகிறது. அதன்பிறகு இந்த தண்ணீர் காபூர் ஆற்றில் இணைந்து பாகிஸ்தான் செல்லுகிறது. தற்போது இந்த ஆறு தொடர்பாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே எந்த தண்ணீர் பகிர்வு ஒப்பந்தமும் இல்லை. இதனால் ஆப்கானிஸ்தானின் அணை கட்டும் முயற்சியை தடுக்க வாய்ப்பில்லை எனவும், இந்த அணை கட்டும் பட்சத்தில் பாகிஸ்தான் பெரிதும் பாதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பாகிஸ்தானுக்கு தண்ணீரை நிறுத்தும் நோக்கில் குனார் ஆற்றின் குறுக்காக பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்க ஆப்கானிஸ்தான் கட்டும் புதிய அணைக்கும் இந்தியா நிதி உதவி செய்ய உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக இதுவரை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. முன்னதாக கடந்த 15ம் தேதி நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களுடன் நேரடியாக பேசியிருந்தார். கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரடியாக பேசவில்லை.
இந்நிலையில் தான் கடந்த 15ம் தேதி தொலைபேசியில் பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் பின்னணியில் காபூல் ஆற்றின் குறுக்காக ஷாடூத் அணை கட்டும் திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்துக்கு நம் நாடு ரூ.200 கோடி வழங்க உள்ளது. இந்த அணை கட்டுவதன் மூலம் ஆப்கானிஸ்தானில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டர் அளவுக்கு விவசாயம் செய்ய முடியும். அதோடு 20 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும். இதனால் இந்த திட்டம் பற்றி பேசப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அதேபோல் ஆப்கானிஸ்தானில் அணை கட்ட நம் நாடு இப்படி உதவி செய்வது என்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கடந்த 2016ம் ஆண்டில் சல்மா அணை என்பது ஆப்கானிஸ்தானில் திறக்கப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு தண்ணீர் கிடைப்பதை குறைத்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications