கார்பனை உறிஞ்சுவதற்கு பதிலாக.. டன் டன்னாக வெளியேற்றும் ஆப்பிரிக்க காடுகள்.. ஏன் இந்த திடீர் மாற்றம்
அமேசான்: காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு காலத்தில் ஆப்பிரிக்கக் காடுகள் முக்கிய பங்காற்றின. இருப்பினும், இப்போது அவை தலைகீழாக மாறி, அதிக கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017க்கு பிறகே இந்த மாற்றம் வேகமாக நடந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
புவி வெப்பமயமாதல் காரணமாகப் பருவநிலை வேகமாக மாறி வருகிறது. இந்தப் பருவநிலை மாற்றத்திற்குப் புவி மண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலையை மாற்ற அதிக மரங்கள் நடப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் பலரும் தொடர்ச்சியாகச் சொல்லி வந்துள்ளனர். அதேபோல இயற்கையாக அமையும் காடுகளும் காரன் எமிஷனை கட்டப்படுத்த உதவியிருக்கிறது.

அமேசான்
குறிப்பாக அமேசான் காடுகள் இதில் நமக்கு பெரியளவில் உதவி இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஆப்பிரிக்கக் காடுகளில் இருந்து ஆக்சிஜனுக்கு பதிலாக கார்பன் டை ஆக்சைட் அதிகம் வருகிறதாம். 2017க்கு பிறகே இந்த மாற்றம் அதிகம் நடந்துள்ளது. அதாவது உலகின் மூன்று முக்கிய மழைக்காடுகள் பிராந்தியங்களான தென் அமெரிக்க அமேசான், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவை இப்போது வளிமண்டலத்தில் அதிக கார்பனைச் சேர்க்கிறது. இதனால் புவி வெப்பமயமாதலை மேலும் அதிகரிக்கவே செய்கிறது.
நிலைமை மாறியது
கடந்த காலங்களில் ஆப்பிரிக்காவின் காடுகள் ஒளிச்சேர்க்கை மூலம் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடை (CO2) உறிஞ்சி, கார்பனை வெளியிட்டு வந்தது. ஆப்பிரிக்க காடுகள் இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு பில்லியன் டன்களுக்கும் அதிகமான CO2ஐ உறிஞ்சின. ஆனால், இப்போது இந்த காடுகள் உறிஞ்சுவதை விட அதிக கார்பனை வெளியிடுகின்றன. விவசாயம், மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட காரணங்களால் வனப்பகுதி அழிந்துள்ள நிலையில், அதுவே காரன் எமிஷனை அதிகரித்துள்ளது.
உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் சுரங்க வேலைகளும் தாவரங்களின் இழப்பு மற்றும் புவி வெப்பமயமாதலைத் தீவிரப்படுத்தி, சுற்றுச்சூழல் அமைப்புகளின் மீள் தன்மையைக் குறைத்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். காட்டுத்தீயும் வளிமண்டலத்தில் கார்பனை சேர்த்துள்ளது. காட்டு தீ இன்னும் நிலைமையை மோசமாக்குவதாகவே இருக்கிறது.
சாட்டிலைட் படங்கள்
இந்த ஆய்வுக்காக சாட்டிலைட் படங்களை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். பிறகு எவ்வளவு கார்பன் அல்லது கார்பன் டை ஆக்சைடு வெளியேறி இருப்பது என்பதை மதிப்பிட்டனர். 2007 முதல் 2010 காலகட்டத்திலேயே ஆப்பிரிக்காவில் கார்பன் அளவு அதிகரிக்கத் தொடங்கியதாம். 2017க்கு பிறகு இந்த மாற்றம் அதிகரித்துள்ளது. ஆக்சின் வெளியேற்றம் தொடர்ந்து குறைந்த நிலையில், கார்பன் வெளியேற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இது குறித்து ஆய்வாளர் டாக்டர் பெட்ரோ ரோட்ரிக்ஸ்-வேகா கூறுகையில்"ஆப்பிரிக்காவின் காடுகளில் இதே நிலை தொடர்ந்தால் கார்பன் வெளியேற்றம் அதிகரிக்கும். இதனால் நிலைமை மோசமாகும். வெப்ப நிலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவிட்டே போகும். அது பேரழிவுக்கு நம்மை இட்டுச் செல்லும்" என்றார்.
புவி வெப்பமயமாதல்
புவி வெப்பமயமாதல் ஒரு பெரிய பிரச்சனையாக மாறி வரும் நிலையில், அதைச் சரி செய்ய எல்லா நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இருப்பினும், அதை வெகு சில நாடுகள் மட்டுமே அதற்கு ஒப்புக்கொண்டு நிதியளிக்கின்றன. உலக நாடுகள் தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பேரழிவு நிச்சயம் என எச்சரிக்கப்படுகிறது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications