இந்தியாவுடன் மோதல்.. வட்டியும் முதலுமாக வாங்கி கட்டிய "கனடா" ஜஸ்டின் ட்ரூடோ.. சரிவுக்கு காரனம் என்ன?
ஒட்டாவா: கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகளாக பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ நேற்று அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ சமீப காலமாக இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். அவருடைய தற்போதய ராஜினாமா நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. இது குறித்தான விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியா மீது, எந்த வித ஆதாரமும் இன்றி குற்றம் சாட்டி வந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் அவரது கட்சியில் இருந்தே கிளம்பியது. ஆனாலும் இந்தியாவுடன் மோதல் போக்கை கையாண்டு வந்த ட்ரூடோ, தற்போது உச்சகட்ட நெருக்கடி ஏற்பட்டு இருப்பதால் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

உள்நாட்டு அரசியல் சிக்கல்கள், புதிய ஜனநாயகக் கட்சி ஆதரவைத் தொடர மறுத்தது ஆகியவற்றால் கடும் நெருக்கடியை எதிர்கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இது குறித்து ட்ரூடோ கூறுகையில், "கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். கட்சி அதன் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்ய உள்ளேன். கனடாவை வழிநடத்த கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான பியர் பொய்லிவ்ரே சரியான நபர் அல்ல" என்றார்.
கனடா பிரதமராக 9 வருடம் ஆட்சியில் இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, பதவி விலகல் முடிவை எடுத்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ சமீப காலமாக இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். அவருடைய தற்போதய நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. இது குறித்தான விவரங்களை பார்க்கலாம்.
இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி மர்ம நபர்களால் கனடாவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது படுகொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்க, அதற்கு இந்தியா மறுத்து கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனால், இந்தியா - கனடா உறவில் தூதரக ரீதியாக விரிசல் ஏற்பட்டது.
இந்தியா மீது குற்றம் சாட்டிய ட்ரூடோ அரசு இதற்கான உறுதியான ஆதாரம் எதையும் வழங்கவில்லை. கனடாவில் உள்ள காலிஸ்தானி சீக்கிய வாக்கு வாங்கியை கருத்தில் கொண்டு ட்ரூடோ இவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. அரசியல் ரீதியாக ஜஸ்டின் ட்ரூடோ இந்த பிரச்சினையை கையாள்வதாகவும் விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த யுக்தி அவருக்கு எந்த வகையிலும் கை கொடுக்கவில்லை. மாறாக அவருக்கு எதிராகவே திரும்பியது.
தேசிய பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் விதமாக ஜஸ்டின் ட்ரூடோ, இப்படி நடந்து கொள்வதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தியாவுடனான மோதல் போக்கை கையாண்டதால் சொந்த கட்சிக்குள்ளேயே ட்ரூடோவிற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. லிபரல் கட்சியின் பல முக்கிய எம்பிக்கள் போர்க்கொடி தூக்கினர். பொதுவெளியில் ட்ரூடோவிற்கு எதிராக குரல் கொடுத்தனர். இதனால் இறுதியில் ஜஸ்டின் ட்ரூடோவே இப்படியொரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் உண்டானது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications