"மேக் இன் இந்தியா"... வயிறு கலங்கிய சீனா.. "மேட் இன் சீனா" பிரசாரத்தைக் கையில் எடுத்தது!
பெய்ஜிங்: இந்தியாவில் மோடி அரசு மேக் இன் இந்தியா என்ற பிரசாரத்தை இன்று தொடங்கியுள்ள நிலையில், சீனாவும் அதிரடியாக மேட் இன் சீனா திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
தொழில்துறையினருக்கு ஏகப்பட்ட வரிச் சலுகைகளையும் சீன அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் மேக் இன் இந்தியா பிரசாரம் தொடங்கியுள்ள அதே நேரத்தில் சீனாவும் அதே போல ஒரு திட்டத்தை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உயர் தொழில்நுட்ப இறக்குமதிகளுக்கு சீனா தற்போது முக்கியத்துவமும், ஆதரவும் தரப் போகிறதாம். அதேபோல மேட் இன் சீனா பொருட்களின் தரத்தை உயர்த்தும் வகையில் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக கவனம் கொடுக்கவுள்ளனராம்.

வரிச் சலுகைகள்
இந்தத் திட்டத்தின் ஒரு அம்சமாக, தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி சாதனங்களையும், வளர்ச்சி ஆய்வுக்கான முயற்சிகளையும் மேம்படுத்த வரிச் சலுகைகளை சீன அரசு வழங்கும்.

ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு
ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு வாங்கப்பட்ட புதிய சாதனங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த பல்வேறு வரிச் சலுகைகளும் நிதியுதவியும் சீன அரசால் வழங்கப்படும்.

பிரதமர் தலைமையிலான குழு முடிவு
இந்த முக்கிய முடிவுகளை பிரதமர் லீ கிகியாங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் குழு எடுத்து அறிவித்துள்ளது.

எந்தெந்த துறைகளுக்குச் சலுகை
விமானப் போக்குவரத்து, பயோ மெடிசின் உற்பத்தி, ரயில்வே, கப்பல் துறை, மின்னணுத் துறை, கம்ப்யூட்டர், தொலைத் தொடர்பு, சாப்ட்வேர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு இந்த வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளனவாம்.

சீனாவிலும் பரவிய மேக் இன் இந்தியா பிரசாரம்
இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த மேக் இன் இந்தியா பிரசாரத் திட்டத்தை சீனாவின் ஷாங்காய், குவாங்ஷோ, ஹாங்காங் ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் நேரடியாக ஒளிபரப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதாரிக்கும் சீனா
இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தால் தனக்குப் பாதிப்பு வரலாமோ என்று சீனா அஞ்சுகிறது. இதையடுத்தே சீனத் தயாரிப்புகளை தரமுடையதாக மாற்ற அது களம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications