இந்தியாவுக்கு வந்த வார்னிங்.. அசாமில் குண்டுவைத்த உல்பா.. பின்னணியில் பாகிஸ்தான் - வங்கதேசம் சதி?
கவுஹாத்தி: குடியரசு தினவிழாவில் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் 2 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்புக்கு உல்பா (ஐ) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் வங்கதேச சிறையில் உள்ள உல்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பரேஷ் பருவாவை பாகிஸ்தான் உளவு அதிகாரிகள் சந்தித்து பேசிய நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளதோடு, நம்நாட்டுக்கு உல்பா சார்பில் வார்னிங் விடுக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் கடந்த 26ம் தேதி குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக்கோடி ஏற்றி வைத்தார். இந்த விழாவில் இந்தோனேஷியா அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர்.

அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். தமிழகத்தில் ஆளுநர் ஆர்என் ரவி தேசியக்கொடி ஏற்றினார். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் விழாவில் பங்கேற்றனர்.
அதேபோல் அசாம் மாநில தலைநகர் கவுஹாத்தியில் ஆளுநர் லட்சுமண் ஆச்சாரியா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில் தான் குடியரசு தினவிழா நாளில் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் பெஹார்பாரி பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடம் உள்பட 2 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
வெடித்த வெடிகுண்டுகள் சக்தி குறைந்து காணப்பட்டன. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குடியரசு தினவிழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்ட நிலையில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்தது எப்படி? என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே தான் இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான உல்பா (I) பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு என்பது உல்பா அமைப்பின் ஒருபகுதியாகும். குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு உல்பா (ஐ) அமைப்பு பொறுப்பேற்று அதன் 2வது லெப்டினனட் இனுான் அசோம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛மக்களின் பாதுகாப்பை கவனத்தில் வைத்து வேண்டும் என்றே சக்தி குறைந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி உள்ளோம். இந்த சம்பவம் என்பது எவ்வளவு பாதுகாப்பு போட்டாலும் அதனை எங்களால் தகர்த்து கைவரிசை காட்ட முடியும் என்பதை பறைசாற்றும் விதமாக உள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் வங்கதேசம் - பாகிஸ்தானின் சதித்திட்டம் இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது சமீபத்தில் பாகிஸ்தானின் உளவு மற்றும் ராணுவ அதிகாரிகள் வங்கதேசத்துக்கு சென்று நம் நாட்டின் எல்லையில் ரகசியமாக விசிட் செய்தனர். அதன்பிறகு அந்த நாட்டின் சிறையில் உள்ள உல்பா பயங்கரவாதியான அசாமை சேர்ந்த பரேஷ் பருவை சந்தித்து பேசியிருந்தனர். இவர் யார் என்றால் அசாமில் பிறந்தவர்.
இந்திய பிரிவினைவாதியான இவர் யுனைடெட் லிபரேஷன் ஃப்ரண்ட் ஆஃப் அசோம் (United Front of Asom) அமைப்பை உருவாக்கினார். உல்பா என அழைக்கப்படும் இந்த அமைப்பு அசாமை இந்தியாவில் இருந்து தனியாக பிரிக்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துள்ளது. பர்வேஷ் பருவா தற்போது வங்கதேச சிறையில் 14 ஆண்டு சிறை தண்டனை பெற்று உள்ளார். 2004ல் ஆயுத கடத்தல் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே தான் பாகிஸ்தான் உளவு அதிகாரிகள் அவரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் பின்னணியில் ‛மிஷன் நார்த் ஈஸ்ட்' திட்டம் இருக்கலாம் என்ற தகவல் வெளியானது. அதாவது நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் உல்பா பயங்கரவாதிகளை வைத்து பதற்றத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் அடுத்த சில நாட்களிலேயே அசாம் தலைநகர் கவுஹாத்தியில் சக்தி குறைந்த குண்டுகள் வெடித்துள்ளன. இதனால் இந்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி நம் நாடும் சுதாரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதோடு, பயங்கரவாத அமைப்புக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications