Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்புடன் ஒரே புகைப்படம்.. சேல்ஸ்மேன் பட்டம்.. சொந்த நாட்டிலேயே அசிங்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இராணுவத் தளபதியான ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், ஆறு மாதங்களுக்குள் மூன்றாவது முறையாக அமெரிக்காவிற்கு சென்று வந்துள்ளார். அண்மையில் அவர் வாஷிங்டனுக்கு மேற்கொண்ட பயணத்தால், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார். வாஷிங்டனில் உள்ள அதிபர் மாளிகையில், முனீரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு பாகிஸ்தானின் அரிய மண் கனிமப் பொருட்கள் அடங்கிய பெட்டியை வழங்கிய புகைப்படம், நாட்டிற்குள் ஒரு அரசியல் களத்தில் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா பாகிஸ்தானின் அரிய மண் கனிமப் பொருட்கள் மற்றும் பிற முக்கியமான கனிம வளங்களை பயன்படுத்த ஆர்வமாக இருக்கிறது. இதற்கு பாகிஸ்தானும் பச்சை கொடி காட்டி உள்ளது. தற்போதைய நிலையில் அமெரிக்கா, சீனாவை நம்பி இருக்காமல், முக்கியமான கனிமப் பொருட்களுக்குப் புதிய ஆதாரங்களைத் தேடி வருகிறது. இந்த அரிய வகை கனிமங்கள் அமெரிக்காவின் உயர்தொழில்நுட்பம், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பசுமை ஆற்றல் மாற்றத்திற்கு மிகவும் அவசியம் ஆகும். பாகிஸ்தானும் சீனாவிற்கு தந்தது போல் அமெரிக்காவிற்கு அரிய வகை கனிமங்களை தருவதற்கு ஒப்புகொண்டிருக்கிறது.

After rare minerals photo with Trump Pakistan Army Chief gets salesman title

பாகிஸ்தானில் அமெரிக்கா முதலீடு

கடந்த செப்டம்பர் மாதம், பாகிஸ்தானின் இராணுவத்துடன் இணைந்த பிரெண்டயர் வொர்க்ஸ் ஆர்கனைசேஷன் ( Frontier Works Organisation) என்ற நிறுவனத்துடன், மிஸ்ஸௌரியைத் தளமாகக் கொண்ட அமெரிக்கா ஸ்டெர்டஜிக் மெட்டல்ஸ் (USSM) என்ற அமெரிக்க தனியார் நிறுவனம், பல-உலோகச் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கும் கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்கும் ஒரு 500 மில்லியன் டாலர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

பாகிஸ்தான் நெருக்கடி

பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. எனவே வெளிநாட்டுக் கடனைக் குறைக்கும் நோக்கில் கனிம வளங்களைப் பயன்படுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்க முதலீட்டை ஈர்ப்பதன் மூலம், நாட்டின் சுரங்கத் துறையை விரிவுபடுத்தவும் நவீனமயமாக்கவும் பாகிஸ்தான் அரசு முயற்சி எடுத்துள்ளது.எனவே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அலுவலகம், அமெரிக்க நிறுவனங்களை கனிம மற்றும் எரிசக்தித் துறையில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் கோடி பணம் கிடைக்கும் என்று பாகிஸ்தான் ஆர்வமாக உள்ளது.

ஆசிம் முனீர் டிரம்ப் சந்திப்பு

இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் ராணுவத் தளபதியான ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், ஆறு மாதங்களுக்குள் மூன்றாவது முறையாக அமெரிக்காவிற்கு சென்று வந்துள்ளார். அண்மையில் அவர் வாஷிங்டனுக்கு மேற்கொண்ட பயணத்தால், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார். வாஷிங்டனில் உள்ள அதிபர் மாளிகையில், முனீரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு பாகிஸ்தானின் அரிய மண் கனிமப் பொருட்கள் அடங்கிய பெட்டியை வழங்கிய புகைப்படம், நாட்டிற்குள் ஒரு அரசியல் களத்தில் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தி இருக்கிறது.

சேல்ஸ்மேன் பட்டம்

பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றத்தில் ஐமல் வாலி கான் என்ற எம்பி பேசுகையில், ராணுவ தளபதி முனீர் ஒரு சேல்ஸ்மேன் போல நடந்து கொண்டார். நடந்த நாடகத்தை பாகிஸ்தான் பிரதமர் ஒரு மேலாளரைப் போல பார்த்துக் கொண்டிருந்தார் . ராணுவத் தளபதி எந்தத் தகுதியில் வெளிநாட்டுத் தலைவர்களுடன் முதலீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். இது அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குள்ளாகி உள்ளது. இது நாடாளுமன்ற பாராளுமன்ற அவமதிப்பு ஆகும். இது முழுக்க முழுக்க சர்வாதிகாரம், ஜனநாயகம் என்பதே இதில் இல்லை" என்று ஐமல் வாலி கான் ஆவேசமாக பேசினார்.

சவுதி அரேபியா ஒப்பந்தம்

மேலும் ட்ரம்ப்பின் சமாதானத் திட்டத்திற்கு பாகிஸ்தானின் ஆதரவு, சவுதி அரேபியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த விவரங்கள் மற்றும் பொதுவாக சிவில் தலைவர்களுக்கு ஒதுக்கப்படும் இராஜதந்திர அணுகலை முனீர் ஏன் நடத்துகிறார் என்பது குறித்து விளக்கம் பெற, பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்திற்கும் கான் கோரிக்கை வைத்தார்.

பாகிஸ்தானில் அதிருப்தி

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுடன் கனிம ஏற்றுமதி மற்றும் சுத்திகரிப்புத் திட்டங்கள் உட்பட புதிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை அமெரிக்காவும் பாகிஸ்தானும் அறிவித்துள்ள நிலையில் இந்தக் சர்ச்சை எழுந்திருக்கிறது. இதனை ராணுவத் தளபதி தலைமை தாங்குவது பாகிஸ்தானை சர்வதேச அளவில் பலவீனமாகக் காட்டுவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் நிர்வாகத்தில் இராணுவத்தின் ஆதிக்கம் குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியும் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+