இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய 400 ஏவுகணைகள்.. அமெரிக்கா ‛வார்னிங்’கை மீறி தாக்குதல்.. வருகிறதா உலகப்போர்?

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: காசா மீதான போர் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரானில் இருந்து 400 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதால் அங்குள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்னர். இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. இந்த ‛அட்டாக்' நடந்தால் ஈரான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என இன்று அமெரிக்கா எச்சரித்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் அண்டை நாடுகளாக உள்ளன. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இயங்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சனை போராக மாறி உள்ளது. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

israel iran america

இதனை ஈரான் கடுமையாக எதிர்த்து வருகிறது. அதுமட்டுமின்றி ஈரான் என்பது இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளவில்லை. இதனால் இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் நாட்டில் செயல்படும் தனது ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மூலம் ஈரான், இஸ்ரேலை தாக்கி வருகிறது.

இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. ஹிஸ்புல்லாவின் படை தளபதிகளை ஒவ்வொருவராக இஸ்ரேல் தீர்த்து கட்டியது. கடைசியாக ஹிஸ்புல்லாவின் தலைமை தளபதி நஸ்ருல்லாவையும் ஏவுகணை தாக்குதல் மூலம் 2 நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் தீர்த்து கட்டியது. இதனால் இஸ்ரேல் மீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று காலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எச்சரிக்கை செய்தது. அதில், ‛‛அடுத்த 12 மணிநேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தும். இதற்கு முழுவீச்சில் ஈரான் தயாராகி வருகிறது. ஈரான் இந்த தாக்குதலை நடத்தும் பட்சத்தில் அமெரிக்கா, இஸ்ரேலை பாதுகாக்க தேவையான நடவடிக்கையில் ஈடுபடும். இதனால் ஈரான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும்'' என எச்சரிக்கை செய்தது.

அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து இஸ்ரேல் அலர்ட்டானது. ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொண்டு வந்தது. இத்தகைய சூழலில் தான் அமெரிக்கா எச்சரித்தது போலவே திடீரென்று ஈரான் 100க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதலை தொடர்ந்துள்ளது. மொத்தம் 400 ஏவுகணை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியதாக கூறப்படுகிறது.

ஈரானின் இந்த தாக்குதலால் இஸ்ரேலில் உள்ள சைரன்கள் அலறின. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஈரானின் இந்த தாக்குதலை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. இருப்பினும் சேத விபரங்கள் பற்றிய எந்த தகவலையும் இஸ்ரேல் வெளியிடவில்லை. ஆனாலும் கூட ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் தனது ‛அயன்டோம்’ மூலம் வானிலேயே இடைமறித்து செயலிழக்க செய்தோடு, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு திசைதிருப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் மீதான ஈரானின் நேரடி தாக்குதலால் பல்வேறு நாடுகளும் அங்குள்ள நிலையை உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளன. குறிப்பாக இஸ்ரேலில் உள்ள தங்களின் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வீடு மற்றும் பதுங்கு குழிகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பல நாடுகள் இஸ்ரேலில் உள்ள தங்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளன.

காசா மீது இஸ்ரேல் போர் தொடங்கி ஓராண்டு கடக்க உள்ளது. அதேபோல் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் - இஸ்ரேலுக்கும் தொடர்ந்து மோதல் என்பது வலுத்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் ஈரான் முதல் முறையாக தற்போது இஸ்ரேல் மீது நேரடியாக ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதோடு 3ம் உலகப்போர் மூளுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+