மீண்டும்.. மீண்டும்.. கனடா-இந்தியா உறவில் தொடர் பதற்றம்! இப்போது ஜஸ்டின் ட்ரூடோ சொன்னத பாருங்க
ஒட்டாவா: காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான விஷயத்தில் மீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவை குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபடும் அமைப்புகள் நாட்டில் தடை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு தான் கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை. இதன் தலைவராக இருந்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்.

இந்தியாவில் வாழும் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி இந்த படையை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடுவதில் ஈடுபட்டு வந்தன. அதோடு கனடாவில் இருந்தபடி இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தவும் அந்த படை முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே தான் கடந்த ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். அவரை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. இதுபற்றி கனடா அரசு விசாரித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
அதாவது ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு உள்ளது. இந்தியாவின் ஏஜென்சி மூலம் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என நம்பகமான தகவல்கள் வந்திருப்பதாக கூறியது. இதனை இந்தியா உடனடியாக மறுத்தது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை கனடா நிறுத்த வேண்டும் என வார்னிங் கொடுத்தது. இதையடுத்து கனடா இந்திய தூதரை வெளியேற்ற, இந்தியா கனடா தூதரை வெளியேற்றியது.
மேலும் கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கான விசா வழங்கும் நடைமுறையை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. மேலும் கனடா வாழ் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் இந்தியா அறிவிப்பு வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளது. இருப்பினும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து இந்தியாவை குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் தான் கனடா தலைநகர் ஒட்டாவாவில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த வேளையில் இந்தியா-கனடா உறவு குறித்து ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுகளை நாங்கள் சில வாரங்களுக்கு முன்பே இந்தியாவிடம் கூறினோம். நான் கடந்த திங்கட்கிழமை பேசினேன். அதனை இந்தியா மறுத்துள்ளது.
இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக சேர்ந்து செயல்பட தயாராக இருக்கிறோம். அவர்கள் எங்களுடன் சேர்ந்து செயல்படுவார்கள் என்று நம்புகிறோம். இதனால் இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள மிகத்தீவிரமான விஷயத்தை கண்டுபிடிக்க முடியும். மேலும் '' என்றார். இதன்மூலம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து இந்தியாவை குற்றம்சாட்டி வருவது உறுதியாகி உள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications