தாழ பறந்த விமானம்.. தோட்டத்தில் இருந்தவரின் தலையில் கொட்டிய மனிதக் கழிவுகளால் அதிர்ச்சி!
ஆன்டோரியோ: கனடாவில் ஆன்டோரியாவில் விண்ட்சாரில் தனது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர் மீது விமானத்திலிருந்த மனிதக் கழிவுகள் விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் கடந்த ஜூலை மாதம் மத்தியில் நடந்திருந்தாலும் ராயல் போரோ ஆஃப் விண்ட்சார் மற்றும் மெய்டன்ஹெட் விமானப் பேரவையின் கூட்டத்தில் உள்ளூர் கவுன்சிலர் கேரன் டேவிஸ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
அப்போது டேவிஸ் பேசுகையில் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வருவதற்கும் செல்வதற்கும் முக்கிய பாதையாக விளங்குவது விண்ட்சார் பகுதியாகும். இவ்வாறு ஒரு விமானம் விண்ட்சார் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தது.

தலை மேல்
அப்போது அங்கு ஒரு தோட்டத்தில் ஒரு நபர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது தலை மேல் பறந்த அந்த விமானத்திலிருந்து திடீரென ஏதோ கொட்டியது. நாற்றம் வீசிய நிலையில் அதை பார்த்த அவர் இது மனிதக் கழிவு என தெரிந்தவுடன் மேலும் அதிர்ச்சி அடைந்தார். அந்த கழிவுகள் அவரது தோட்டம், அவரது தலை, தோட்டத்தில் உள்ள நிழற்குடைகள் மீது விழுந்துள்ளது.

மனிதக் கழிவுகள்
இதனால் அந்த இடமே மிகவும் அசுத்தமான இடமாக மாறியது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் இது போல் விமானத்திலிருந்து மனிதக் கழிவுகள் கீழே கொட்டும். ஆனால் அவரை உறைவிக்கப்பட்டவையாக இருக்கும். ஆனால் இந்த தோட்டத்தில் விழுந்தது அந்த மாதிரியான கட்டிகள் இல்லை. அப்படியே ராவாக மனிதக் கழிவுகள் விழுந்தது என்றார்.

கேஸ்டில்
அப்போது எட்டான் மற்றும் கேஸ்டில் ஆகியவற்றின் கவுன்சிலர் ஜான் போடன் கூறுகையில் மோசமான வானிலை காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம். இதனால் மனிதக் கழிவுகள் உறையாமல் அப்படியே இருந்திருக்கும் என்றார். அப்போது அங்கிருந்த வைட்டிஃபீல்டு பாரிஷ் கவுன்சிலர் ஜியோஃப் பாக்ஸ்டான் 40 ஆண்டுகளுக்கு மேலாக விமான நிலையத்தில் நான் பணியாற்றியுள்ளேன். ஆனால் இது மிகவும் அரிதான ஒன்று.

ப்ளூ ஐஸ்
உறைய வைக்க பயன்படுத்தப்படும் ப்ளூ ஐஸ்ஸால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கும். இல்லாவிட்டால் கழிப்பறைகளிலிருந்து ஏதேனும் லீக்காகி இது போல் நடந்திருக்கலாம். தாழ பறக்கும் போது இது போல் நடந்திருக்கும் என்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கு புகார் கூறிய போது முதலில் அந்த பகுதியில் தங்கள் விமானம் பறக்கவே இல்லை என்றார்கள். ஆனால் ரூட் டிராக்கிங் செயலி மூலம் அந்த நபர் நிரூபித்த நிலையில் இந்த சம்பவத்தை அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். பொதுவாக விமானத்தில் உறைய வைக்கப்படும் கழிவுகள் ஒவ்வொரு முறையும் விமானம் தரையிறங்கியவுடன் அப்புறப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications