எமோஷனலான அஜித்.! 3 முறை அழுத்தமாக ரசிகர்களுக்கு சொன்ன அட்வைஸ்.. இப்போ இதுதான் டிரெண்டிங்!
துபாய்: ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொள்ள அஜித் குமார் இப்போது துபாய் சென்றுள்ளார். விபத்து உள்ளிட்ட காரணங்களால் கார் ஓட்டுவதில் இருந்து விலகினாலும் ஒரு உரிமையாளராகத் தொடர்ந்து அங்கேயே இருந்து பணிகளைக் கவனித்து வருகிறார். இதற்கிடையே நீண்ட நாட்களுக்குப் பிறகுத் தனது ரசிகர்களுக்கு அஜித் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இப்போது இந்த வீடியோ தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்.. படம் வெற்றியோ தோல்வியோ அஜித் ரசிகர்கள் எப்போதும் அவரை விட்டுக்கொடுத்ததே இல்லை.

அஜித் படம் தியேட்டரில் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட ரசிகர்கள் எப்போதும் அவரை கொண்டாடியே வருகிறார்கள். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்திற்கு கார் ரேஸில் ஆர்வம் என்பது அனைவருக்கும் தெரியும்.
அஜித்:
சில காலம் கார் ரேஸில் இருந்து விலகியிருந்த அஜித், மீண்டும் அதற்குத் திரும்பினார், துபாயில் நடைபெறும் 24 மணி நேர கார் ரேஸில் அவரது அணி பங்கேற்றது. அதில் அஜித் பிரதான டிரைவராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது கார் விபத்தில் சிக்கியது. விபத்து நடந்தாலும் கூட தொடர்ச்சியாக அவர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்தச் சூழலில் தான் திடீரென அவர் கார் ஓட்ட மாட்டார் என்றும் உரிமையாளராக அணியின் பணிகளைத் தொடர்ந்து கவனிப்பார் என்றும் நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே இது தொடர்பாக அஜித் குமார் தரப்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கார் ரேஸ் உட்பட பல விஷயங்கள் குறித்துப் பேசினாலும், தனது ரசிகர்களுக்கும் முக்கியமான அட்வைஸ்களை வழங்கியுள்ளார்.
எமோஷனலான அஜித்:
அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த 24 மணி நேர கார் ரேஸ் எவ்வளவு கடினமானது என்பதை விளக்கும் அஜித், தனது ரசிகர்களுக்கு கோரிக்கையையும் வைத்திருக்கிறார். அந்த வீடியோவில் அஜித், "ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மோட்டர் ஸ்போர்ட்ஸில் எனக்கு எப்போதும் அதீத ஆர்வம் இருந்துள்ளது. இதைப் பார்க்க நிறைய ரசிகர்கள் நேரில் வந்திருந்தனர். மிகவும் எமோஷனலாக இருந்தது.
நான் சொல்ல வேண்டிய விஷயம், சொல்லப்போற விஷயம் ஒன்னே ஒன்னு தான். நீங்கள் எல்லோரும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும், மன நிம்மதியுடனும் வாழணும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன். உங்க குடும்பத்தை முதலில் பாருங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். நன்றாகப் படியுங்கள். கடுமையாக உழைத்து வேலை பாருங்கள்.
Ak.
— Suresh Chandra (@SureshChandraa) January 11, 2025
My fans
Their commitments. pic.twitter.com/5fW17Gghgu
மன உறுதி முக்கியம்:
நமக்குப் பிடித்த விஷயங்களை நாம் செய்யும் போது அதில் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. அதேநேரம் வெற்றி அடையவில்லை என்றாலும் சோர்ந்து போகாதீர்கள். போட்டிப்போடுவது தான் மிகவும் முக்கியம். மன உறுதி, அர்ப்பணிப்பை எப்போதும் விட்டுத்தராதீர்கள்" என்கிறார்.
கார் ரேஸ் குறித்து விளக்கிய அவர், "வழக்கமான கார் ரேஸுக்கும் இந்த 24 மணி நேரப் போட்டிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. வழக்கமான கார் ரேஸில் ஒரு காருக்கு ஒரு டிரைவர் தான். ஆனால், இதில் ஒரு காருக்கு 2,3 டிரைவர்கள் இருப்பார்கள். எனவே, இதில் எல்லாருக்கும் பொறுப்பு இருக்கிறது. வண்டியை பாதுகாக்க வேண்டும்.. அதேநேரம் வேகமாகவும் ஓட்ட வேண்டும்..
அட்வைஸ்
சினிமாவை போலவே இதிலும் டிரைவர், மெக்கானிக் என கூட்டு முயற்சி தேவை. அனைவரும் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்தாலே போதும் ரிசல்ட் தானாக வரும். ரசிகர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். ப்ளீஸ், சண்டை போடாதீர்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. மகிழ்ச்சியாக இருங்கள்" என்று குறிப்பிட்ட அவர் குடும்பத்தைப் பாருங்கள் என்பதை அழுத்தமாக 3 முறை சொல்லி தனது வீடியோவை நிறைவு செய்தார்.
குடும்பத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதையே அஜித் எப்போதும் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறார். இப்போது துபாய் ரேஸுக்கு நடுவே வெளியிட்டுள்ள வீடியோவிலும் அவர் அதையே குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை தான் சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications