ஏமனில் சிறையைத் தகர்த்து 300 கைதிகளை தப்ப வைத்த அல்- கொய்தா தீவிரவாதிகள்
ஏடன்: உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் ஏமனில் அல்-கொய்தா தீவிரவாதிகள் சிறை ஒன்றைத் தகர்த்து தங்கள் தலைவர் உட்பட 300 கைதிகளை விடுவித்துள்ளனர்.
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருவதால் அங்கு உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஏமன் ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில் பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடி வருகிறது. ஏடன், சனா உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

ஏமனில் தங்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசும் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஏமனில் ஹட்ரமவுட் மாகாணத்தில் உள்ள சிறை ஒன்றை அல்-கொய்தா தீவிரவாதிகள் இன்று தாக்கியுள்ளனர். பின்னர், அச்சிறையில் சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக அடைக்கப் பட்டிருந்த தங்கள் இயக்கத்தின் மூத்தத் தலைவர் காலித் படார்பி உட்பட 300 கைதிகளை சிறையிலிருந்து தப்பிக்க வைத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் இரண்டு சிறை அதிகாரிகள் மற்றும் 5 கைதிகள் கொல்லப் பட்டதாக ஏமன் நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹட்ரமவுட் சிறை மட்டுமின்றி மாகாண தலைநகரான முகல்லாவில் உள்ள ஒரு வணிக வளாகத்திலும், வங்கி கிளை மற்றும் போலீஸ் தலைமையகத்திலும் அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏற்கனவே போர் பதற்றத்தால் அச்சத்தில் இருக்கும் மக்கள், தற்போதைய சிறை தகர்ப்பு சம்பவத்தால் மேலும் பீதி அடைந்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications