சிரியா விமானப்படை ஓடுதளத்தில் விட்டு 45 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற அல்கொய்தா தீவிரவாதிகள்
பெய்ரூட் : சிரியாவில் சிறைபிடித்த 45 ராணுவ வீரர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் போன்றே சுட்டுக்கொன்று அல்கொய்தா தீவிரவாதிகள் தங்களது வெறிச்செயலை உலகுக்கு காட்டியுள்ளனர்.
சிரியாவில் அதிபருக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இங்கு ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கொய்தாவின் நுஸ்ரா முன்னணி ஆகியவை ராணுவத்துக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி வடமேற்கு சிரியாவின் அபு ஜுகோரில் உள்ள முக்கிய விமானப்படை தளத்தை நுஸ்ரா முன்னணி கைப்பற்றியது. அப்போது, 56 வீரர்களை சுட்டுக்கொன்றதுடன், ஏராளமான ராணுவ வீரர்களையும் சிறைபிடித்தது.
இந்நிலையில், சிறைப்பிடிக்கப்பட்ட ராணுவக் கைதிகளில் 45 பேரை நேற்று விமானப்படை ஓடுதளத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நுஸ்ரா முன்னணி முதல் முறையாக இத்தனை வீரர்களை மொத்தமாக படுகொலை செய்துள்ளது. பொதுவாக சிறைபிடிக்கப்பட்ட பாதுகாப்பு படையினரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தான் கொலை செய்து வருகின்றனர்.
தற்போது அல்கொய்தா துணை அமைப்பு தீவிரவாதிகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளைப் போன்றே கொடூரத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications