பாரீஸ் ஸ்டைலில் இங்கிலாந்தை தாக்க அல் கொய்தா திட்டம்: எம்ஐ5 தலைவர் எச்சரிக்கை
லண்டன்: பாரீஸ் பாணியில் இங்கிலாந்தில் தாக்குதல் நடத்த அல் கொய்தா திட்டமிட்டுள்ளது என்று அந்நாட்டு உளவு நிறுவன தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இங்கிலாந்தின் உளவு நிறுவனமான எம்ஐ5-ன் டைரக்டர் ஜெனரல் ஆன்ட்ரூ பார்கர் கூறுகையில்,
அண்மை காலங்களில் இங்கிலாந்து போலீஸார் மற்றும் எம்ஐ5 சேர்ந்து மூன்று தீவிரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தியுள்ளோம். இங்கிலாந்தில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகளின் அனைத்து திட்டங்களையும் பாதுகாப்பு துறையினரால் தவிடுபொடியாக்க முடியாது.
நாங்கள் கடும் முயற்சி செய்கின்ற போதிலும் தீவிரவாதிகளின் அனைத்து திட்டங்களையும் தடுக்க முடியாது.
அல் கொய்தா தீவிரவாதிகள் பாரீஸ் தாக்குதல் பாணியில் இங்கிலாந்தில் தாக்குதல் நடத்தி பலரை கொல்லக்கூடும் என்றார்.
தீவிரவாத அச்சுறுத்தலை அடுத்து இங்கிலாந்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அல் கொய்தாவின் சிரியா பிரிவு இங்கிலாந்தில் பாரீஸ் பாணியில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. அந்த தாக்குதலை சிரியா அல்லது ஈராக்கில் இருந்து நாடு திரும்பியுள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த போராளிகள் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பயணிகள் விமானத்தை தாக்குவது, மும்பை பாணியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்துவது, வாகனங்களை வைத்து ஆட்களை கொல்வது போன்று தீவிரவாதிகள் தாக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர இங்கிலாந்தில் இருந்து 600 பேர் சிரியா சென்றுள்ளனர் என்று நம்பப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications