போட்டுத் தள்ளுவோம்... வங்கதேச நடிகர்களுக்கு அல்கொய்தா எச்சரிக்கை!
நியூயார்க்: வங்கதேசத்தில் மத கோட்பாடுகளுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வரும் நடிகர்களும், எழுத்தாளர்களும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுவார்கள் என அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
வங்காளதேசத்தில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அமெரிக்க வாழ் வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அவிஜித்ராய் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். முஸ்லிம் மத கோட்பாடுகளுக்கு எதிரான கருத்துக்களை எழுதும் எழுத்தாளர்கள் மற்றும் புத்தக பதிப்பாளர்கள் அங்கு தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில், சமீபத்தில் புத்தக பதிப்பாளர்கள் பைசல் அரிபின்திபான், அகமது ரகீம் துதுல் ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டனர். அவர்களில் பைசல் அரிபின் திபாஸ் பரிதாபமாக இறந்தார்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட எழுத்தாளர் அவிஜித்ராய் புத்தகங்களை வெளியிட்டவர்கள் ஆவர். இவர்களது படுகொலைக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில், டுவிட்டர் இணைய தளத்தில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள அல்கொய்தா தீவிரவாதிகள், எழுத்தாளர்களை விட புத்தகம் வெளியிடுபவர்கள்தான் மிக மோசமானவர்கள். இவர்கள் மத கோட்பாடுகளுக்கு எதிரான புத்தகங்களை வெளியிட்டு எழுத்தின் மூலம் மத சிந்தனையில் வெறி கொண்டவர்களை பணம் சம்பாதிக்க உதவி செய்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
அதற்கு ‘அடுத்த இலக்கு யார்? என்று தலைப்பிட்டு தீவிரவாதிகள் மேலும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், எழுத்தாளர்கள், கவிஞர்கள், செய்தி பத்திரிகை மற்றும் வார, மாத இதழ் ஆசிரியர்கள், செய்தியாளர்கள் மற்றும் நடிகர்கள் கொலை செய்யப்படுவார்கள் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications