மக்கள் பேசுவதை ரெக்கார்ட் செய்து வெளியிடும் அலெக்ஸா.. புதிய சிக்கலில் அமேசான் நிறுவனம்
அமேசானின் 'அலெக்ஸா' என்ற வீட்டில் பயன்படுத்தப்படும் மென்பொருள் சாதனம் மக்கள் பேசுவதை அப்படியே ரெக்கார்ட் செய்து இணையத்தில் வெளியிடுகிறது.
Recommended Video

நியூயார்க்: அமேசானின் 'அலெக்ஸா' என்ற வீட்டில் பயன்படுத்தப்படும் மென்பொருள் சாதனம் மக்கள் பேசுவதை அப்படியே ரெக்கார்ட் செய்து இணையத்தில் வெளியிடுகிறது. மக்கள் பேசும் விவரங்கள் எல்லாவற்றையும் அப்படியே ரெக்கார்ட் செய்து இணையத்தில் வெளியிட்டு புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
2014ல் தான் அமேசான் நிறுவனம் 'அலெக்ஸா' சாதனத்தை உருவாக்க முடிவு எடுத்தது. 2015 இறுதியில் இதை வைத்து சோதனை செய்தது. 2017 இறுதி வரை 50,000க்கும் அதிகமான மக்கள் உலகம் முழுக்க இதை பயன்படுத்துகிறார்கள்.
'அலெக்ஸா' சாதனம் பார்க்க ஸ்பீக்கர் போலவே இருக்கும். ஆனால் இது நாம் சொன்னதை எல்லாம் செய்யும் குட்டி சிட்டி ரோபோட் என்று கூட சொல்லலாம். நாம் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் சர்ச் செய்து பதில் சொல்லும். அதேபோல் வீட்டில் இருக்கும் மின்னணு சாதனங்களுடன் இதை இணைத்து எல்லாவற்றையும் இயக்கலாம்.
|
உதவி
இதன் மூலம் வீட்டில் டிவியை இயக்கலாம், மின்விசிறி ஆன் செய்வது, காரை ஆன் செய்வது கதவை திறப்பது, பாடல் ஒளிபரப்புவது, போன் செய்வது, பேஸ்புக்கில் சர்ச் செய்து போஸ்ட் போடுவது என என்ன வேண்டுமானாலும் இதன் மூலம் செய்ய முடியும். கூடுதல் சாப்ட்வேர்களை அப்லோட் செய்து பிடித்த மாதிரி இதை மாற்றிக் கொள்ளலாம். அமெரிக்கா மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ளவர்களும் இதை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
|
முதல்
ஆனால் இதில் இப்போது பிரச்சனை வந்துள்ளது. மக்கள் என்ன கேட்டாலும் அவ்வப்போது இது மோசமாக சிரித்து இருக்கிறது. மனிதர்களை கிண்டல் செய்வது போல மோசமான பேய் மாதிரி சிரித்து இருக்கிறது. இந்த சிரிப்பு சத்தமே பயமுறுத்தும் அளவிற்கு இருக்கிறது. இதற்கு சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் நாம் சொல்லும் விஷயங்கள் தவறாக சிரிக்க சொன்னதாக நினைத்துக் கொண்டு அலெக்ஸா சிரிப்பதாக அமேசான் நிறுவனம் பதில் சொல்லி இருக்கிறது.

பிரச்சனை
இந்த நிலையில் இதே அலெக்ஸா இப்போது இன்னொரு பிரச்சனையிலும் சிக்கி உள்ளது. இது மக்கள் பேசுவதை ரெக்கார்ட் செய்து வேறு நபர்களுக்கு அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்கள் பேசுவதை அப்படியே கேட்டு , ரெக்கார்ட் செய்து, அதை இணையத்தில் வெளியிட்டுள்ளது. போலந்து தம்பதிகள், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமேசான் விளக்கம்
இதற்கு அமேசான் விளக்கம் கொடுத்துள்ளது. அதன்படி, அந்த தம்பதிகள் பேசியதை தவறாக கேட்டு, அதை பின்பற்றி, அவர்கள் கட்டளை என்று நினைத்துக் கொண்டு அந்த ஆடியோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. ஆனால், மக்கள் இது முழுவதும் தவறு அமேசான் மக்களை வேவு பார்க்கிறது, அலெக்ஸா செய்வதில் நிறைய தவறு இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications