"இது" கூட கண்ணை உறுத்துதே.. பெண் "நியூஸ் ரீடர்களுக்கு" வந்த ஆர்டர்.. தாலிபன்களின் உச்சக்கட்ட குரோதம்
தாலிபன்கள் பெண் செய்தி வாசிப்பவர்களுக்கு அடுத்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்
காபூல்: இன்னொரு விஷயத்திலும் பெண்களுக்கு செக் வைத்துவிட்டனர் தாலிபன்கள்.. அடுத்தடுத்த விஷயங்களில் நெருக்கடி தந்து வரும் நிலையில், ஆப்கன் மக்கள் மிகப்பெரிய கலக்கத்திலும் துயரத்திலும் தொடர்ந்து சிக்கி வருகிறார்கள்.
மறுபடியும் ஆப்கனில் ஆட்சியை பிடித்துள்ள தாலிபான்கள், அந்நாட்டு பெண்களுக்கு அவரது உரிமைகளை அளிப்போம் என்பதை முதல் வாக்குறுதியாகவே தந்திருந்தனர்.
ஆனால், சொன்னபடி செய்யாமல், ஆட்சியைப் பிடித்த பிறகு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளைதான் விதித்தனர். அந்த கட்டுப்பாடு இப்போதும் தொடர்கிறது.

கட்டுப்பாடு
பெண்கள் டிவி விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது, பெண் பத்திரிகையாளர்கள் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் பர்தா அணிந்துகொண்டுதான் கலந்து கொள்ளவேண்டும், ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் நீண்ட தூரம் வெளியில் செல்லக்கூடாது, 6-ம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் கல்வி கற்ககூடாது, பெண்களுக்கு டிரைவிங் லைசென்சு வழங்க தடை என்று அவர்களின் கெடுபிடிகள் நீண்டுகொண்டே போகின்றன.

தாலிபன்கள்
இதைதவிர எந்நேரமும் தாலிபன்கள் வீதிகளில் துப்பாக்கியுடன் ரோந்து சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள்.. இதெல்லாம் பார்த்து அந்நாட்டு பெண்கள் கதிகலங்கி போயுள்ளனர்... துப்பாக்கியும் கையுமாக தாலிபன்கள் தெருக்களில் நடமாடும் வீடியோ, போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி, உலக நாடுகளுக்கும் கலக்கத்தையும், கவலையையும் தந்துவிட்டது..

அரசுப்பணி
இந்நிலையில் கடந்த 7-ம் தேதி தாலிபன்கள் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்கள்.. அதில், "பொது இடங்களில் பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும்.. அரசுப் பணிகளில் இருக்கும் பெண்கள் பர்தா அணியாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அதேபோல் அரசுப் பணிகளில் உள்ள ஆண்களின் மனைவியோ, மகளோ பர்தா அணியாவிட்டால் அவர்கள் மீதும் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அறிவிப்பு வெளியானது.

நியூஸ் ரீடர்கள்
இப்போது இன்னொரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது.. ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்களும் டிவியில் செய்தி வாசிக்கும்போது, தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.. இதுகுறித்து தலிபான் அரசின் நல்லொழுக்கங்களுக்கான துறையின் செய்தி தொடர்பாளர் ஆகிப் மகாஜர் சொல்லும்போது, "நாங்கள் செய்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.. எங்களின் முடிவை அவர்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்" என்று தெரிவித்துள்ளார்.

பெண் செய்தி வாசிப்பாளர்
இப்படித்தான், பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு பணி நிமித்தமாக நிறைய கெடுபிடிகள் பிறப்பித்தனர்.. இதனால் அவர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலைமையும் ஏற்பட்டது.. இப்படி மிக கடுமையான, பழமைவாத சட்டங்கள் ஆப்கனின் புதிய அரசால் பின்பற்றப்படலாம் என்று ஏற்கனவே உலக மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்திருந்தனர்.. அப்படியெல்லாம் இருக்காது, பெண்களுக்கு முழு உரிமை, சுதந்திரம் உண்டு என்று சொல்லிய தாலிபான்கள், இப்போது தங்கள் வேலையை காட்ட தொடங்கிவிட்டனர்.. இதனால் அப்பெண்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications