'ஏலியன்ஸ்' என்னை கடத்த முயற்சித்தனர் – இங்கிலாந்து பெண் பரபரப்பு தகவல்
லண்டன்: தன்னை வேற்றுகிரகவாசிகளான "ஏலியன்ஸ்" கடத்த முயற்சி செய்தனர் என்று இங்கிலாந்து பெண்மணி ஒருவர் பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வேற்று கிரகவாசிகள் என அழைக்கப்படும் ஏலியன்ஸ் குறித்து பரவலாக ஒரு பேச்சு இருக்கிறது.
அது மனிதர்களிடம் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது என்றும் ஆனால், அது மனிதர்களுக்கு தெளிவாக புரிவதில்லை என்றும் கூறப்படுகிறது.

கண்காணிக்கும் ஏலியன்ஸ்:
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சமந்தா மெக்டொனால்டு என்ற பெண் தன்னை ஏலியன்ஸ் கடத்த முயற்சித்தனர் என அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு உள்ளார். அவர் கூறும்போது, கடந்த 1990 ஆம் ஆண்டில் இருந்து வேற்று கிரக வாசிகள் தன்னை வந்து பார்த்துள்ளனர்.
அழிந்த நினைவுகள்:
ஆனால், என்னால் அந்த அனுபவத்தை நினைவுபடுத்தி பார்க்க முடியவில்லை. எனது நினைவில் இருந்து அவை நீங்கி விட்டது என்று தெரிவித்துள்ளார். ஆனால், தூங்கி எழும்போது ஊசி போட்ட அடையாளம் உள்ளிட்ட காயங்களுடன் தான் காணப்பட்டதாக சமந்தா தெரிவித்துள்ளார்.
ரெப்டீலியன்ஸ்-கிரேஸ்:
வேற்று கிரகத்தில் இருந்து வரும் அவர்களை தி ரெப்டீலியன்ஸ் மற்றும் தி கிரேஸ் என்று அழைக்கும் சமந்தா அவை ஒன்றாக இணைந்து பணியாற்றுபவை என நம்புகிறார். சமந்தா மேலும் கூறுகையில், நான் அவர்களை பார்த்து என்னிடம் என்ன வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், உன்னையும், உனது குடும்பத்தையும் எடுத்து செல்ல வந்திருக்கிறோம் என்று தெரிவித்ததாக கூறியுள்ளார்.
தியானம் செய்யும் சமந்தா:
அவர்கள் ஏன் தொடர்ந்து என்னிடம் வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் தியானம் மேற்கொள்வதால் எனது சக்தி குறித்து அறிவதற்காக அவர்கள் வருகிறார்கள் என நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடத்தியது தெரியாது:
உங்களை கடத்தியதாக கூறும் நீங்கள் அப்பொழுது நடந்தது என்ன என்று தெரிவியுங்கள் என்று கேட்டதற்கு, நீங்கள் கடத்தப்பட்டதை குறித்த நினைவுகளை கொண்டிருக்க முடியாது.
கனவுதானோ:
இதனை நாங்கள் கனவு என கூறுவோம். உங்களுக்கும் இதுபோன்று தான் ஏற்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, நிச்சயமாக இல்லை. எனது உடல் முழுவதும் அடையாளங்களுடன் நான் எழுந்துள்ளேன். சில நேரங்களில், உங்களுக்குள் நினைவுகள் வரும்.
ஊசி அடையாளங்கள்:
ஆனால், அது உங்களுக்கு சொந்தமாக இருக்காது. அதனை வேறு எந்த வழியிலும் உங்களுக்கு விளக்கிட முடியாது என்று பதிலளித்தார். ஒரு கடத்தலுக்கு பின்பு தூங்கி எழும் நான், ஊசி அடையாளங்களால் எனது உடல் சூழப்பட்டு இருப்பதை பார்த்தேன். உடலில் காயங்களுடன், தழும்புகள் இருப்பதையும் நான் கண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஹெலிக்காப்டர்கள்:
வேற்று கிரக அனுபவம் ஏற்பட்டதால், பூமியில் நான் கண்காணிக்கப்பட்டு வருகிறேன் என்று நம்புவதாக கூறிய அவர், எனது வீட்டின் மேலே கறுப்பு ஹெலிகாப்டர்கள் பறப்பதும், என்னை போலீசார் கார்களில் பின் தொடர்வதுமாக இருக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.
எனவே, நாங்கள் உன்னை கண்காணித்து வருகிறோம். நீ அதிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்பதனை சொல்லவே அவர்கள் முயற்சித்து வருவதாக நான் கருதுகிறேன் என சமந்தா தெரிவித்துள்ளார்.
கருப்பு ஒளி சோதனை:
இதுபோன்று வேற்று கிரகவாசிகள் குறித்து கூறும் பலரையும் அவர்களது அனுபவத்தை அடுத்து 48 மணி நேரத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள் மற்றும் கறுப்பு ஒளி அலைவரிசையில் வைத்து சோதனை செய்துள்ளனர்.
வேற்று கிரக தட்டுகள்:
அதில், அவர்களது உடலில், கைகள் வைத்த அடையாளங்கள் போன்ற ஒளி தடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,500 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 3 இல் ஒரு பங்கினர், தாங்கள் வேற்று கிரக தட்டுகளை கண்டுள்ளோம் என கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications