உலகின் பெரிய ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.. நாசாவால் முடியாததை முடித்த தனியார் நிறுவனம்!
உலகின் மிகப்பெரிய ராக்கெட் ஒன்று இன்று விண்வெளியில் ஏவப்படுகிறது.
Recommended Video

நியூயார்க்: உலகில் பெரிய நாடுகள் எல்லாம் விண்வெளி துறையில் முக்கியமான பங்காற்றி வருகிறது. ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் சில தனியார் நிறுவனங்களும் விண்வெளி துறையில் முக்கியமான மைல்கல்லை எட்டி வருகிறது.
அந்த வகையில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மிக சிறப்பான பணிகளை செய்து வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் கோடிஸ்வரர்களில் ஒருவரான 'எலோன் மஸ்க்' என்பவரின் நிறுவனம் ஆகும் இது.
இந்த நிறுவனம் தற்போது உலகிலேயே பெரிய ராக்கெட்டை ஏவ இருக்கிறத., அந்த ராக்கெட் இன்று மதியம் ஏவப்படும்.
|
என்ன மாதிரியான ராக்கெட்
இந்த ராக்கெட்டிற்கு ''ஃபல்கான் ஹெவி'' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. உலகிலேயே இதுதான் பெரிய சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும். 18 போயிங் விமானங்களுக்கு இணையான சக்தியும், 747 ஜெட் விமானங்களுக்கு இணையாக வேகமும் இதில் இருக்கிறது. இதன் மூலம் மனிதர்களை எளிதாக செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும் என்று கூறப்படுகிறது.
|
என்ன நடக்கும்
இதன்மூலம் 64 மெட்ரிக் டன் எடையை பூமியின் சுற்றுவட்டப்பாதையிலும், 16 மெட்ரிக் டன் எடையை செவ்வாய் கிரகத்திலும் நிறுத்த முடியும். நாசா 1970களில் துறந்த 'சாட்டர்ன் வி' ராக்கெட்டை விட இது பல மடங்கு பெரிது. இதுவரை அந்த ராக்கெட்தான் பெரிய ராக்கெட்டாக இருந்து வந்தது.

ஏன் அனுப்பப்படுகிறது
இந்த ராக்கெட் தற்போது எந்த முக்கியமான காரணத்திற்காகவும் அனுப்பப்படவில்லை. இதில் தற்போது தேவையில்லாத பொருட்களை சில மட்டும் வெறுமனே எடைக்காக வைக்கப்பட்டு அனுப்பப்பட இருக்கிறது. எதிர்காலத்தில் இதை குறிப்பிட்ட காரணங்களுக்காக அனுப்ப திட்டம் இருக்கிறது.
|
நேரம்
இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு மேல் இந்த ராக்கெட் ஏவப்படும். தற்போது நாசாவை விட சிறந்த நிறுவனமாக இந்த் நிறுவனம் மாறியுள்ளது. அமெரிக்க விமானப்படையே இந்த ராக்கெட் குறித்து விளக்கம் கேட்டு, சில உதவியும் கேட்டு இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications