எனக்கு அதிபர் பதவிக்கான லுக் இல்லையா? - ட்ரம்பை விளாசிய ஹிலரி
நியூயார்க்: தனக்கு அதிபர் பதவிக்கான லுக் இல்லை என்ற ட்ரம்பின் கமெண்டுக்கு, நேரடி விவாதத்தில் பதிலடி கொடுத்தார் ஹிலரி க்ளிண்டன்.
ஜனநாயகக் கட்சி சார்பாக அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஹிலரிக்கு அதிபர் பதவிக்கான லுக் இல்லை என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அது பற்றி நேரடி விவாதத்தில் கேட்டபோது 'ஸ்டெமினா' அதாவது உடல்நிலை இல்லை என்ற அர்த்தத்தில் சொன்னேன் என்று மழுப்பினார்.

இதற்கு பதிலடி கொடுத்த ஹிலரி, "112 நாடுகளுக்கு பயணம், பலகட்ட பேச்சுவார்த்தையுடன் பல்வேறு ஒப்பந்தங்கள், செனட் அவையில் 16 மணி நேரம் கேள்விகளை எதிர் கொண்டு பதிலளித்தது இதையெல்லாம் ட்ரம்ப் செய்திருந்தால் 'ஸ்டெமினா' பற்றி என்னிடம் கேட்கலாம்," என்றார் ஹிலரி. இதற்கு பார்வையாளர்கள் பலத்த கரவொலி எழுப்பினார்கள்.
உடனே ட்ரம்ப், "ஆமாம்... ஹிலரி அனுபவசாலிதான். ஆனால் அவருக்கு நேர்ந்ததெல்லாம் மோசமான அனுபவங்களே," என்றார்.
"லுக் பற்றி மட்டுமல்ல பெண்களை இழிவாகவும், அழகுப் பதுமைகளாக பார்ப்பதுதான் ட்ரம்புக்குத் தெரிந்த விசயம். அவர் பெண்களை மதிக்கத் தெரியாதவர். மற்றும் இன பாகுபாடு பார்ப்பவர்.
அவரது நிறுவன குடியிருப்பில் கருப்பின மக்களுக்கு வாடகைக்கு வீடு கொடுப்பதில்லை என்று விதிமுறையே வைத்திருந்தார்கள். அவரது கொள்கைகள் இன பாகுபாடு பார்ப்பதுதான்," என்றும் ஹிலரி குற்றம் சுமத்தினார்.
-இர தினகர்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications