For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்ரேல் போர்க்குற்ற விசாரணைக் குழுவில் இடம் பெற க்ளூனியின் வருங்கால மனைவி மறுப்பு!

Google Oneindia Tamil News

ஜெனீவா: இஸ்ரேல் மீதான போர்க்குற்றங்களை விசாரிக்க ஐ.நா. மனித உரிமை கமிஷன் அமைத்துள்ள விசாரணைக் கமிஷனில் இடம் பெற பிரபல சட்ட நிபுணரான அமல் அலாமுதீன் மறுத்துள்ளார்.

அமல் அலாமுதீன், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியின் காதலி ஆவார். விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது.

தான் ஏற்கனவே ஒப்புக் கொண்ட வழக்குககள் நிறைய இருப்பதால், இந்தக் கமிஷனில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அமல் அலாமுதீன் தெரிவித்துள்ளார்.

Amal Alamuddin Explains Why She Will Not Serve on the UN's Gaza Human Rights Commission

உறுப்பினர் என செய்தி:

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், "ஐ.நா. விசாரணைக் கமிஷனில் நானும் ஒரு உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

பாவம் மக்கள்:

காஸா முனையில் தற்போது உள்ள நிலைமை மிகவும் பயங்கரமானது. அப்பாவி பொதுமக்கள் மிகப் பெரிய அளவில் பலியாகியுள்ளது பெரும் வேதனையைத் தருகிறது.

விசாரணை அவசியம்:

இதுதொடர்பாக நிச்சயம், சுயேச்சையான, சுதந்திரமான போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்றே நானும் கருதுகிறேன்.

பெருமையான விஷயம்:

இதுதொடர்பான விசாரணைக் கமிஷனில் இடம் பெறுவது தொடர்பாக ஐநா.விடமிருந்து என்னைத் தொடர்பு கொண்டனர். அது எனக்குப் பெருமையானதாக கருதுகிறேன்.

எட்டு வழக்குகள்:

அதேசமயம், தற்போது எட்டு முக்கிய வழக்குகளில் நான் தீவிரமாக உள்ளேன். எனவே என்னால் ஐநா. அழைப்பை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

என்னுடைய வாழ்த்துக்கள்:

அதேசமயம், விசாரணைக் கமிஷனில் இடம் பெறுவோர், மிகுந்த தைரியத்துடனும், உறுதியுடனும் செயல்பட்டு தங்களது நோக்கத்தில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார் அமல் அலாமுதீன்.

திருமணப் பணிகள்:

தனது வழக்கறிஞர் பணி தவிர தனது திருமணப் பணிகளையும் அமல் அலாமுதீன் கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

மனித உரிமை வழக்கறிஞர்:

அமல் அலாமுதீன் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இவர் லெபனான் பெற்றோருக்குப் பிறந்தவர் ஆவார். இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவரது முழுப் பெயர் அமல் ரம்ஸி அலாமுதீன் என்பதாகும். மனித உரிமைகள் குறித்த வழக்கறிஞராக இவர் செயல்பட்டு வருகிறார்.

நிபுணத்துவம் அதிகம்:

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்காக இவர் வாதாடியுள்ளார். மேலும் முன்னாள் உக்ரைன் பிரதமர் யூலியா டிமோஷென்காவுக்காகவும் வாதாடியுள்ளார். மனித உரிமைகள் குறித்த நல்ல நிபுணத்துவம் பெற்றவர் இவர்.

English summary
Despite reports to the contrary, Amal Alamuddin will not be serving on the United Nations' Gaza Human Rights Commission. George Clooney’s fiancé released the following statement regarding the recent news, and explained why she chose to turn down the position.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X