ஃபெய்லியரான லேண்டிங் கியர்.. கொஞ்சமும் பதறாமல் பத்திரமாக விமானத்தை தரையிறக்கிய விமானி! வாவ் சம்பவம்
கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் ஒன்றில் லேண்டிங் கியர் திடீரென பழுதான நிலையில், விமானத்தை பத்திரமாக தரையிறக்கி விமானி அசத்தியிருக்கிறார்.
நேற்று ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகே இருக்கும் நியூகேஸில் விமான நிலையத்திலிருந்து வடக்கே போர்ட் மெக்குவாரிக்கு பீச் கிராஃப்ட் சூப்பர் கிங் ஏர் எனப்படும் சிறிய ரக விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த விமானத்தில் விமான ஒருவதும், 60 மற்றும் 65 வயது மதிப்புள்ள மூதாட்டி மற்றும் முதியவர் என மொத்தம் மூன்று பேர் பயணித்திருக்கிறார்கள்.

இந்த விமானத்தில் அதிகபட்சமாக 11 பேர் வரை பயணிக்க முடியும். இந்த விமானத்தின் அதிகபட்ச வேகம் 536 கி.மீ. அதாவது ஒன்றரை மணி நேரத்தில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்றுவிட முடியும். அதேபோல ஒரு முறை இதில் எரிபொருள் நிரப்பினால் சுமார் 4700 கி.மீ வரை பயணிக்க முடியும். எனவே சொந்தமாக விமானம் வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு. அதேபோல விமான சேவைக்கும் இந்த விமானங்கள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
இப்படி இருக்கையில் போர்ட் மெக்குவாரிக்கு இந்த விமானத்தில் விமானியுடன் சேர்த்து 3 பேர் சென்றிருக்கிறார்கள். விமானம் கிளம்பி சிறிது நேரத்தில், லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இது ஒரு இக்கட்டான சூழல். பெரும்பாலும் பழைய விமானங்களில் இதுபோன்ற பிரச்னைகள் எழுவதுண்டு. இப்பிரச்னைக்கான தீர்வில் 0.1 சதவிகிதம் பிசுறு தட்டினாலும் கூட விமான பெரும் விபத்தில் சிக்க வாய்ப்பிருக்கிறது.
எனவே முழு கண்ட்ரோலையும் விமான கையில் எடுத்துக்கொண்டார். விமானத்தின் நிலைமை குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் விமானம், கொஞ்ச நேரம் விமான நிலையத்தையே சுற்றி சுற்றி வந்திருக்கிறது. இறுதியாக பத்திரமாக தரையிறக்கப்பட்டிருக்கிறது. இதில் யாருக்கும் சிறிய காயம் கூட ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து பயணி அளித்த பேட்டி, விமானியின் திறனை வெளி கொண்டு வந்திருக்கிறது. "எங்களுக்கு சூழல் புரிந்தது. நடுவானில் இருக்கிறோம். எங்களால் கீழே இறங்க முடியாது. ஏனெனில் லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை. அடுத்து சில நிமிடங்களில் நாங்கள் உயிரோடு இருப்போமா இல்லையா என்று கூட தெரியாது. இந்த நேரத்தில் விமானியாலும் எதுவும் செய்ய முடியாது. எனவே அவரை சத்தம் போடுவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை.
ஆனால் அவர் நினைத்தால் எங்களை காப்பாற்ற முடியும். அதை அவர் செய்தும் காட்டினார். எங்கள் விமானம் விமான நிலையத்தை சுற்றி சுற்றி வந்துக்கொண்டிருந்து. 2 மணி நேரமாக இதையேதான் விமானி இதையேதான் செய்துக்கொண்டிருந்தார். காரணம் விமானத்தின் எரிபொருள் காலியாக வேண்டும். லேண்டிங் கியர் இல்லாத நேரத்தில், தரையிறங்கும் போது விமானத்தின் இறக்கைகள்தான் முதலில் அடிவாங்கும். இறக்கையில்தான் எரிபொருள் இருக்கிறது.
எனவே நாங்கள் எரிபொருள் முழுவதையும் தீர்த்துவிட்டு, கீழே இறங்க முயன்றோம். ஆனால் எங்களுக்கு கீழே 20 பெலிக்கான் பறவைகள் சுற்றிக்கொண்டிருந்தன. பறவைகள் ஆபத்தானவை, அதுவும் இதுபோன்ற சிறிய விமானங்களுக்கு அது நிச்சயம் பயங்கர ஆபத்தை ஏற்படுத்திவிடும். இருப்பினும், இதெல்லாம் கவனத்தில் கொண்டு விமானி சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கினார்.
எங்களுக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை. விமானியின் திறமை மிகவும் அற்புதமானது. இது போன்ற விமானிகள்தான் தற்போது தேவை" என்று கூறியுள்ளார்.
53 வயதான பீட்டர் ஷாட், தனது 15 வயதிலிருந்து விமானத்தை இயக்கி வருகிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications