சிரியாவின் அரசு விமான படைத்தளத்தில் அமெரிக்கா தாக்குதல்.. 100க்கும் மேற்பட்டோர் பலி
சிரியாவின் ராணுவ விமான படைத்தளத்தின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது.
Recommended Video

டமாஸ்கஸ்: சிரியாவின் தைமூர் ராணுவ விமான படைத்தளத்தின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் 100க்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை 1200 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இந்த போர் இடையில் சில நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்தது.

குறி
இதில் சிரியா ராணுவம் கெமிக்கல் குண்டுகளை பயன்படுத்தி இருக்கிறது. இந்த குண்டுகள் பொதுவாக குளோரின் மூலக்கூறுகள் மூலம் செய்யப்படுகிறது. இது கீழே தரையில் குறிப்பிட்ட வேகத்தில் பட்டவுடன் குளோரின் புகையை வெளியிடும். அதே சமயம் மோசமான சத்தத்துடன் நெருப்பும் உருவாகும். இது பெரிய எதிர்ப்பு அலைகளை உருவாக்கியது.

அமெரிக்க அதிபர்
சிரியா அரசு படையின் இந்த மோசமான நடவடிக்கைக்கு நேற்று அமெரிக்க அதிபர் எதிர்ப்பு தெரிவித்தார். டொனால்ட் டிரம்ப் இது குறித்து ''சிரியா நடத்திய கெமிக்கல் குண்டு தாக்குதலை பொறுத்துக் கொள்ள முடியாது. சிரியா, ஈராக், ரஷ்யா மூன்று நாடுகளும் சேர்ந்து போர் விதிமுறைகளை மீறி வருகிறது. சிரியா அதிபர் இதில் மிகவும் மோசமாக நடந்து வருகிறார்'' என்று குற்றச்சாட்டு வைத்து இருந்தார்.

தொடர் பலி
இந்த நிலையில் நேற்று இரவு சிரியா ராணுவத்தின் தைப்பூர் விமான படைத்தளத்தில் அமெரிக்க படை தாக்குதல் நடத்தி இருக்கிறது. அமெரிக்க விமான படையின் போர் விமானங்கள் இங்கு ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 100க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் மரணம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எத்தனை பேர் மரணம் அடைந்தார்கள் என்று இன்னும் முழு விவரம் தெரிவிக்கப்படவில்லை.

அமெரிக்க மறுப்பு
ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு அமெரிக்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம் அமெரிக்க விமானம்தான் அங்கு பறந்து சென்றது என்று சிரியா அரசு கூறியுள்ளது. ஆனால், இந்த போரை பேச்சுவார்த்தையின் மூலம் நிறைவு செய்வதை மட்டுமே அமெரிக்கா விரும்புகிறது, இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தவில்லை என்று அந்நாடு கூறியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications