'குப்பை'யால் பறிபோன தூக்கம்... கேஸ் போட்ட அமெரிக்கர்.. துப்புரவு தொழிலாளிக்கு சிறை!
ஜியார்ஜியா: அமெரிக்காவில் வழக்கமான நேரத்திற்கு முன்னதாக குப்பை அள்ளியதாக தொடரப்பட்ட வழக்கில் துப்புரவு தொழிலாளிக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தில் வழக்கமாக காலை 7 மணிக்கு பின்னரே குப்பை அள்ள வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், துப்புரவு தொழிலாளி ஒருவர் வழக்கமான நேரத்திற்கு முன்னதாக குப்பை அள்ளியதாகக் கூறப்படுகிறது.

குப்பை அள்ளும் போது உருவான சத்தத்தால் அப்பகுதி மக்களின் தூக்கம் வெகுவாக பாதித்தது. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட துப்புரவு தொழிலாளி மீது வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜியா நீதிமன்றம் குப்பை அள்ளிய தொழிலாளிக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நம்மூர்ல குப்பை அள்ளவே ஆள் வரமாட்டாங்கறாங்களேன்னு நாம பீல் பண்றோம்... அங்க என்னடாண்ணா இப்டி. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்..!.












Click it and Unblock the Notifications