ஒட்டகப் பாலுக்கு மாறி வரும் அமெரிக்கர்கள்!
கலிபோர்னியா: கலிபோர்னியாவில் ஒட்டக பாலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் மக்கள் ஒட்டக பாலை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். கலிபோர்னியாவைச் சேர்ந்த வினியோகஸ்தரான டெசர்ட் ஃபார்ம்ஸ் நேரடியாகவும், 40க்கும் மேற்பட்ட கடைகள் மூலமாகவும் ஒட்டக பாலை விற்பனை செய்து வருகிறது.
இது குறித்து டெசர்ட் ஃபார்ம்ஸ் தனது இணையதளத்தில் கூறியிருப்பதாவது,
பசும்பாலுடன் ஒப்பிடுகையில் ஒட்டக பாலில் கொழுப்புச் சத்து 50 சதவீதம் குறைவு. இந்த பால் எளிதில் ஜீரணம் ஆகும். ஆனால் ஒட்டக பால் பசும்பாலை விட விலை அதிகம். ஒரு பாட்டல் பால் ரூ. 1,084 ஆகும். ஒட்டகம் அதிகம் பால் தருவது இல்லை. ஆனால் அது தரும் பால் அபூர்வமானது என்று அது தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்காவில் ஒட்டகப் பாலை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications