குண்டுமணி தங்கம் வாங்குனாலும் லக்தான்.. தங்கம் வாங்குறவங்க இப்பவே வாங்கி வச்சுக்கோங்க! ஏன் தெரியுமா?
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹10,168 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 காரட் தங்கம் விலை ₹9,320 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹7,670 ஆகவும் உள்ளது. அதாவது 10 கிராம் தங்கம் தற்போது 1,01,680 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இதன் மூலம் 10 கிராம் தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை அடைந்துவிட்டது. ஒரு பவுன் தங்கம்.. அதவாது 8 கிராம் தங்கம் ரூ 1 லட்சத்தை அடைய இன்னும் 19 ஆயிரத்திற்கும் குறைவான ரூபாய் மட்டுமே உள்ளது.

இந்தியாவில் மட்டுமன்றி சர்வதேச அளவில் தங்கம் விலை உயர தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 0.9 சதவீதம் அதிகரித்து $3,249.97 ஆக உள்ளது. அமெரிக்க தங்க எதிர்கால வர்த்தகம் 0.4 சதவீதம் குறைந்து $3,299 ஆக உள்ளது. அமெரிக்க டாலர் குறியீடு 0.2 சதவீதம் உயர்ந்து உள்ளது.
1 அவுன்ஸ் = 28.3495 கிராம் ஆகும். 3500 டாலர் வரை விற்ற இந்த தங்கம் தற்போது 3299 டாலர் என்று உள்ளது. அதாவது 1 மாதத்தில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 25,372 ஆயிரம் ரூபாய் என்ற நிலையில் உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 ஆயிரத்திற்கும் மேல் மதிப்பில் உயர்ந்து உள்ளது.
போர் நடக்கிறது
இப்போது ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக தங்கத்தின் விலை இன்னும் பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் - இஸ்ரே போர் தொடங்கிய ஒரே நாளில் அமெரிக்காவில் spot gold விலையானது 1.3% உயர்ந்து உள்ளது.
இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களையடுத்து தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரும் என்று அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்ததன் காரணமாக, டாலர் மதிப்பு சரியும் வாய்ப்புகள் உள்ளன. உலக அளவில் மார்க்கெட் சரியும்.
இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கி படையெடுத்தனர். வேறு முதலீடுகள் எதுவும் பாதுகாப்பானதாக இருக்காது என்பதால்.. தங்கத்தை நோக்கி மக்கள் செல்ல தொடங்கி உள்ளது.
தங்கம் வாங்க சரியான நேரம் இதுவா?
1. தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
2. தற்போது தங்கம் விலை கடந்த சில வாரங்களாக குறைந்து மீண்டும் தங்கம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்து வருகிறது . இனி தொடர்ந்து கண்டிப்பாக உயரும்.
3. போர் காரணமாக ஏற்பட்ட நிலையற்ற தன்மை காரணமாக தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும்.
4. போர் தீவிரம் அடைய அடைய தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும். அதனால் இப்போதே முடிந்த அளவு தங்கம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் .
5.இஸ்ரேல் ஈரானிய இலக்குகளைத் தாக்கியதால் சந்தையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் பதிலடி கொடுக்க தொடங்கி விட்டதால்.. நிலைமை மோசமாகி உள்ளது. இதனால் சந்தையில் தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து உயரம் நிலை ஏற்பட்டு உள்ளது. தங்கம் மட்டும் இப்போதைக்கு பாதுகாப்பாக இருக்கும். மற்ற சந்தை மதிப்புகள் கடுமையாக சரியும் என்பதால் தங்கம் மட்டுமே பாதுகாப்பாக இருக்கும்












Click it and Unblock the Notifications