Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிணக்குவியல்.. கொரோனாவால் கொத்தாக பலியாகும் மக்கள்.. தகனத்துக்கு வழியின்றி தவிக்கும் சீனா-சோகம்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் ஓமிக்ரான் பிஎப் 7 எனும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒரேநாளில் 3.7 கோடி பேர் வரை பாதிக்கப்பட்ட நிலையில் தினமும் கொத்து கொத்தாக மக்கள் இறந்து வருகின்றனர். இதனால் தகனம் செய்யும் இடங்களில் பிணங்கள் குவியும் நிலையில் இறந்த குடும்பத்தினரை தகனம் செய்ய முடியாமல் உறவினர்கள் நீண்டநேரம் காத்திருக்கும் அவலம் அரங்கேறி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சீனாவின் வூஹான் மார்க்கெட்டில் இருந்து 2019 இறுதியில் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் இந்தியா உள்பட பல நாடுகளுக்கும் பரவியது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் பலகோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் மக்கள் கொத்து கொத்தாக இறந்தனர்.

இதையடுத்து கொரோனாவுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டன. இதையடுத்து கடந்த 8 மாதங்களாக இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்தது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

உருமாறிய பிஎப் 7 வைரஸ் பரவல்

உருமாறிய பிஎப் 7 வைரஸ் பரவல்

இந்நிலையில் தான் தற்போது சீனா, அமெரிக்கா, தென்கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சீனாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் ஆர்ஓ எனும் இனப்பெருக்க எண்ணை 18 என்ற அளவில் கொண்டுள்ளது. இதன்மூலம் இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் 18 பேருக்கு கொரோனாவை பரப்ப முடியும். முந்தைய டெல்டா, ஓமிக்ரான் வைரஸ்கள் வெறும் 5 முதல் 6 என்ற அளவில் ஆர்ஓ எண்ணை கொண்டிருந்த சூழலில் ஓமிக்ரானின் உருமாறிய பிஎப் 7 வைரசுக்கு 18 ஆக கொண்டுள்ளது.

18 சதவீதம் பேர் பாதிப்பு

18 சதவீதம் பேர் பாதிப்பு

இதனால் சீனாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு பின்பற்றப்பட்ட ஜீரோ கோவிட் கட்டுப்பாடுகளும் சமீபத்தில் தளர்ப்பட்டதால் தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு என்பது எல்லை மீறி சென்றுள்ளது. ஒரே நாளில் 3.7 கோடி பேர் வரை சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் அந்த நாட்டின் மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் அதாவது 24 கோடி பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மருத்துவமனையில் இடபற்றாக்குறை

மருத்துவமனையில் இடபற்றாக்குறை

சீனா நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதால் அந்த நாட்டின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. மேலும் மருத்துவமனைகளில் இடமின்றி பலரும் தங்கள் வீடுகளிலேயே தனிமையில் உள்ளனர். கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அங்கு மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தினமும் ஏராளமானவர்கள் கொத்துகொத்தாக மரணமடைந்து வருகின்றனர். இதனால் சீனா மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. மேலும் தினமும் பல ஆயிரம் பேர் இறந்து வருகின்றனர்.

பிணக்குவியல்கள்

பிணக்குவியல்கள்

இந்த சோகத்துக்கு நடுவே தான் சீனாவில் உள்ள தகனம் செய்யும் இடங்கள் பிணக்குவியல்களால் நிரம்பி வருகிறது. கொரோனாவால் பலியான குடும்பத்தினரை தகனம் செய்ய முடியாமல் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது என அமெரிக்காவின் சிஎன்என் செய்தி நிறுவனம் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது. இதுதொடர்பாக சீன மக்கள் தங்களின் வலைதளங்களில் தங்களின் வலியை பதிவு செய்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

40ல் இருந்து 150 ஆக அதிகரித்த தகனம்

40ல் இருந்து 150 ஆக அதிகரித்த தகனம்

இதுதொடர்பாக பைரன் வான் என்ற நபர், ‛‛சீனாவின் டோங்ஜோவில் உள்ள ஒரு தகன மேடையில் டிசம்பர் 22ல் மட்டும் 140 முதல் 150 உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளது. இங்கு இதற்கு முன்பு 40 உடல்கள் தகனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 150 உடல்கள் வரை தகனம் செய்ய கொண்டு வரப்படுகிறது'' என தெரிவித்துள்ளார். மேலும் பல தகன மேடைகள் நிரம்பி வழிகின்றன. குடும்பத்தினரின் உடல்களை தகனம் செய்ய முடியாமல் பொதுமக்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மறைக்கும் சீனா

மறைக்கும் சீனா

மேலும் சீனாவில் உள்ள அரசு ஊடகங்கள் கொரோனா பாதிப்பு, பலி, நிரம்பி வழியும் மருத்துவமனை, தகனம் செய்யும் இடங்கள் பற்றிய எந்த செய்திகளையும் வெளியிடாமல் மறைப்பதாகவும், இதுபற்றி பிற நாடுகளுக்கு எந்த தகவல்களும் கசியாமல் இருப்பதிலும் சீனா அரசு கவனம் செலுத்தி வருகிறது. மேலும் தினமும் ஏராளாமனவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தாலும் கூட அதில் மிக குறைந்த அளவை மட்டுமே சீனா கணக்கு காட்டி வருவதாகவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+