ஈரான் மட்டுமல்ல.. சிரியா - ஈராக்கையும் ‛அட்டாக்’ செய்த இஸ்ரேல்.. என்ன காரணம்? பின்னணி இதுதான்

Subscribe to Oneindia Tamil

டெல்அலிவ்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் கடும் தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரான் மீது போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரானை போல் சிரியா, ஈராக்கிலும் குண்டுகள் வெடித்து சிதறியுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பலாஸ்தீனத்தின் காசாவில் செயல்படும் ஹமாஸ் மீதான இஸ்ரேல் போர் தொடர்ந்துள்ளது. இந்த போர் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதலாக மாறி உள்ளது. ஹமாஸ் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான் தனது ஆதரவு அமைப்பான லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா மூலம் இஸ்ரேலுக்கு குடைச்சல் தந்தது.

israel iran syria

ஒருபுறம் காசா, இன்னொரு புறம் லெபனான் என இருநாடுகளையும் சமாளித்த இஸ்ரேல் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாக்களின் முக்கிய தலைவர்களை வான்வெளி தாக்குதலில் வீழ்த்தி உள்ளது. இதனால் கோபமான ஈரான் கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தியது.

அன்றைய தினம் அதிகாலையில் இஸ்ரேல் மீது ஈரான் சுமார் 185 ஏவுகனைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலில் இருந்து ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் அதன் அருகே உள்ள கராஜ் நகரங்களின் ராணுவ நிலைகளை குறிவைத்து போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து தாக்குதலை தொடங்கி உள்ளது.

ஈரான் தலைநகர் டெக்ரான் அருகே சில இடங்களில் குண்டுகள் வெடித்து சிதறியுள்ளன. குறிப்பாக இமாம் கோமேனி சர்வதேச விமான நிலையத்தின் அருகேயும் குண்டுகள் வெடித்துள்ளன. அதேபோல் டெக்ரானில் உள்ள இஸ்லாமிக் புரட்சிகர காவல்படை (Islamic Revolutionary Guards Corps அல்லது IRGC) தலைமையிடத்தையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. ஆனாலும் இஸ்லாமிக் புரட்சிகர காவல்படைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தான் இஸ்ரேல் இன்று ஈரான் மீது மட்டும் தாக்குதல் நடத்தவில்லை. சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரின் புறநகர் நகரில் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சிரியா தனது வான்வெளி பாதுகாப்பு அமைப்பு மூலம் அதனை தடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதேபோல் ஈராக் நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது தெற்கு ஈராக்கில் உள்ள பாஸ்ராவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த பாஸ்ரா என்பது ஷியா கிளர்ச்சியாளர்களின் தளமாக உள்ளது. குறிப்பாக சதாம் உசைன் காலத்தில் இங்கு தான் ஷியா கிளர்ச்சியாளர்கள் முகாமிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சதாம் உசேன் காலம் முதலே ஈராக்கிற்கும், இஸ்ரேலுக்கும் இடையே நல்ல உறவு என்பது இல்லை. இஸ்ரேலுக்கு பெரும் அச்சுறுத்தலாக ஈராக் பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது ஈரானுடன் மோதுவதால் ஈராக்கும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இஸ்ரேல் அந்த நாட்டை குறிவைத்துள்ளது. அதேபோல் சிரியாவில் பல இடங்களில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுத குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இதனால் சிரியாவையும் இஸ்ரேல் குறிவைத்து தாக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+