Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவின் காலில் விழுந்த வங்கதேசம்.. வேறு வழியில்லை என சரணடைந்த முகமது யூனுஸ்.. பின்னணி இதுதான்

Subscribe to Oneindia Tamil

டாக்கா: இந்தியாவுடன் நல்ல உறவு வேண்டுமா? இல்லாவிட்டால் மோதி பார்க்கிறீர்களா? எதுவாக இருந்தாலும் சரி. தெளிவான முடிவை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சில நாட்களுக்கு முன்பு கூறினார். இது வங்கதேசத்துக்கு வார்னிங்காக பார்க்கப்பட்ட நிலையில் நம் நாட்டின் காலில் வங்கதேசம் விழுந்து விட்டது. இந்தியாவுடன் நல்லுறவு வைப்பதை தவிர வேறு வழியில்லை என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறியுள்ளார்.

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தார். மாணவர்கள் போராட்டத்தால் கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது ஆட்சி கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார். இப்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. இதன் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் உள்ளார்.

bangladesh muhammad yunus india

இவர் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறார். பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார். பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்து கடந்த 1971ல் வங்கதேசம் உருவாக நம் நாட்டின் ராணுவம் தான் உதவியது. ஆனால் அதனை மறந்து முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.

நம் நாட்டின் எல்லையில் தேவையின்றி பதற்றத்தை ஏற்படுத்துகிறார். பாகிஸ்தான் உளவு பிரிவு அதிகாரிகளை நம் நாட்டின் எல்லை பகுதிக்கு அருகே அழைத்து வந்து விசிட் செய்ய வைத்தார். அதுமட்டுமின்றி வலைதளங்கள், பத்திரிகைகளில் நம் நாட்டுக்கு எதிராக ஆதரவாளர்களை வைத்து கருத்து சொல்ல வைத்து வருகிறார். இதனால் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவு என்பது மோசமாகி உள்ளது.

இந்நிலையில் தான் இந்தியாவுடன் நல்லுறவு வைப்பதை தவிர வங்கதேசத்துக்கு வேறு வழியில்லை என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறியுள்ளார். பிபிசிக்கு வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் இந்தியா - வங்கதேசம் இடையே மோசமாகி வரும் உறவு பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முகமது யூனுஸ் கூறியதாவது:

‛‛இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு என்பது இன்னும் நல்ல வடிவில் தான் உள்ளது. இதில் எந்த சீரழிவும் ஏற்படவில்லை. இருநாடுகள் இடையேயான அடிப்படை உறவில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்தியா - வங்கதேசம் இடையே வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உறவு என்பது தொடர்ந்து கொண்டே வருகிறது. இதனால் இருநாடுகளும் இணக்கமாக செல்வதை தவிர வேறு வழியில்லை.

இந்தியா, வங்கதேச நாடுகளுக்கு இடையேயான உறவு மிகவும் சிறந்த முறையில் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு எப்போதும் மிகச்சிறந்த வகையில் அமைந்திருக்கிறது. இது எதிர்காலத்திலும் தொடரும். இருநாடுகளும் நெருக்கமாக இருப்பதால் யாரும் யாரையும் தனிமைப்படுத்த முடியாது. இந்தியா - வங்கதேசம் இடையே சில விஷயங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதங்களுக்கு தவறான பிரசாரங்கள் தான் காரணம். இதன் விளைவாக, எங்களுக்கு இடையே ஒரு தவறான புரிதல் எழுந்துள்ளது. அந்த தவறான புரிதலை நாங்கள் சமாளிக்கவும், அதிலிருந்து மீண்டு வரவும் முயற்சித்து வருகிறோம். '' என்று கூறியுள்ளார். மேலும் தாய்லாந்தின் பாங்காக்கில் ஏப்ரல் 3ம் தேதி பிம்ஸ்டெக் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முகமது யூனுஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதில் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே தான் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் இந்த திடீர் மனமாற்றத்தின் பின்னணியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொடுத்த வார்னிங் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சில நாட்களுக்கு முன்பு ஜெய்சங்கர் மஸ்கட்டில் வைத்து வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவுத்துறை விவகாரத்துறையின் ஆலோசகர் தவ்ஹித் உசேனை சந்தித்து பேசினார்.

அப்போது ‛‛தினமும் வங்கதேசத்தின் இடைக்கால அரசை சேர்ந்தவர்கள் இந்தியா மீது குற்றம்சாட்டி வருகின்றனர். அங்கு நடக்கும் எல்லா விஷயத்துக்கு இந்தியா மீது பழிபோடுகின்றனர். இதனை பார்த்தால் மிகவும் அபத்தமானதாக இருக்கிறது.ஒருபுறம் இந்தியாவுடன் நல்ல உறவை விரும்புகிறோம் என்று சொல்கின்றனர். ஆனால் காலையில் எழுந்து பார்த்தால் அனைத்துக்கும் இந்தியா தான் காரணம் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

இது மிகவும் தவறானது. வங்கதேசம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இந்தியாவுடன் நல்ல உறவு வேண்டுமா? வாருங்கள் தொடரலாம். இந்தியாவை எதிர்க்க வேண்டுமா? தாராளமாக எதிர்த்து நில்லுங்கள். உங்களை எப்படி டீல் செய்ய வேண்டுமோ அப்படி இந்தியா பார்த்து கொள்வோம் என்று எச்சரிக்கை செய்திருந்தார். இப்படியான சூழலில் தான் முகமது யூனுஸின் டோன் என்பது முற்றிலுமாக மாறி உள்ளது. இதன்மூலம் இந்தியாவை எதிர்த்து முஷ்டி முறுக்கிய முகமது யூனுஸ் மொத்தமாக சரணடைந்துள்ளார்.

மேலும் இந்த பேட்டியில் வங்கதேசத்தில் நடக்கும் மோதல், அதன் பின்னணி பற்றிய கேள்விகளுக்கு முகமது யூனுஸ் பதிலளித்தார். இதுபற்றி அவர், ‛‛வங்கதேசத்தில் அமைதியை சீர்க்குலைக்கும் வகையில் செயல்பட்ட சக்தி நாட்டை விட்டு வெளியேறி உள்ளது. அதன் தலைவர்களும் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். நாட்டில் நிலவும் பிரச்சனையை சரியாக கூடாது என்று அவர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது நாட்டுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. வங்கதேசத்தில் குற்றங்களின் எண்ணிக்கை என்பது அதிகரிக்கப்படும். முன்பு இருந்தது போல் தான் இப்போதும் இருக்கிறது '' என்றும் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+