பல்ஹாம் தாக்குதல் டென்ஷனுக்கு நடுவே.. கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தும் பாகிஸ்தான்
கராச்சி: கராச்சி கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஏவுகணை சோதனையை நடத்த பாகிஸ்தான் அரசாணை வெளியிட்டுள்ளது. தரையில் இருந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த திடீர் நடவடிக்கையை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் என்ற இடத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இயற்கை எழிலை ரசித்துக்கொண்டு இருந்த சுற்றுலா பயணிகள் அங்கு வந்த பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு என்பது எல்இடி எனும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பினாமி அமைப்பாகும். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதியாக இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பஹல்காம் தாக்குதலால் கடும் கோபம் அடைந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரமாக்கி உள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரில் 26 அப்பாவி உயிர்களை கொன்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு பதிலடி கொடுக்க தயாராகி வருவது உறுதியாகி உள்ளது. இதனை அறிந்து பாகிஸ்தான் கடும் பீதியில் உள்ளது.
இந்த நிலையில் தான் கராச்சி கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஏவுகணை சோதனையை நடத்த பாகிஸ்தான் அரசாணை வெளியிட்டுள்ளது. தரையில் இருந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த திடீர் நடவடிக்கையை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
பாகிஸ்தான் போருக்கு தயாராக இருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இந்த ஏவுகணை சோதனையை நடத்த முடிவு செய்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா ஒருவேளை ராணுவ நடவடிக்கை எடுத்தால் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பாகிஸ்தான் ஆலோசித்து வருவதாக சொல்லப்படும் நிலையில், பாகிஸ்தான் இந்த சோதனையை நடத்தியிருக்கிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications