லாகூர் அந்த அளவு வொர்த் இல்லை.. இந்தியா அட்டாக் செய்தால் என்ன ஆகும்? பாகிஸ்தான் நெட்டிசன்கள் பதிவு
இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா கடுமையான நடவடிக்கை எடுத்தால் பாகிஸ்தான் நிலைமை என்ன ஆகும் என்பது குறித்து பாகிஸ்தான் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். சொந்த நாட்டை நையாண்டி செய்து பாகிஸ்தான் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள இந்த பதிவுகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்தனர் கொடூரமான இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்தியா வியூகம் வகுத்து வருகிறது. பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி இருக்கும் என பிரதமர் மோடி எச்சரித்து உள்ளார்.

பஹல்காம் தாக்குதல்
பஹல்காமில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்தது அம்பலம் ஆகியிருக்கிறது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைக்குள் வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது. அட்டாரி - வாகா எல்லையும் மூடப்பட்டுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா ரத்து செய்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என இந்தியா அறிவித்து இருப்பதால் பாகிஸ்தான் அலற தொடங்கியுள்ளது. பாகிஸ்தானில் பெரும் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்தியாவை சீண்டும் விதமாக பேசி வருகிறது.
வாகா எல்லை மூடல்
நேற்று ராணுவ தளபதி காஷ்மீருக்கு சென்று சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கோண்டார். இந்திய விமானப்படை விமானங்களும், கடற்படை கப்பல்களும் போர் பயிற்சியில் ஈடுபட்டன. இந்தியாவின் நடவடிக்கையை போருக்கான ஆயத்தம் என்று விமர்சித்த பாகிஸ்தான், சில அடாவடி அறிவிப்புகளையும் வெளியிட்டது. வாகா எல்லையை இரு நாடுகளும் மூடியது. இதனால் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.
ராஜ்ய ரீதியிலான நடவடிக்கையை ஒரு பக்கம் எடுத்து வரும் அதேவேளையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே, எல்லையில் பாகிஸ்தான் அவ்வப்போது கடந்த இரு தினங்களாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
நையாண்டி செய்த பாகிஸ்தான் நெட்டிசன்ஸ்
இதற்கிடையே, இந்தியா ஒருவேளை போர் தொடுத்தால் என்ன ஆகப்போகிறோமோ என்ற அச்சத்தை நையாண்டியுடன் சில பாகிஸ்தான் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்கள். இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியா சிந்து நதியை நிறுத்தினால் குளிக்க கூட தண்ணீர் இருக்காது என்பதை கூறும் வகையில், குளித்துக்கொண்டு இருக்கும் போது, திடீரென்று தண்ணீர் நின்றதால் தவிக்கும் காட்சியை பதிவிட்டு உள்ளனர்.
அணுகுண்டு போடும் அளவிற்கு வொர்த் இல்லை
அதேபோல, லாகூர் எல்லாம் அணுகுண்டு போடும் அளவிற்கு வொர்த் இல்லை என்று சொல்லும் விதமாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார். மற்றொரு நெட்டிசன் வெளியிட்டு இருக்கும் பதிவில், "ஒருவேளை நீங்கள் போர் தொடுக்க விரும்பினால் 9 மணிக்கு முன்னால் ஆரம்பித்துவிடுங்கள். 9.15 மணிக்கு பிறகு கேஸ் விநியோகத்தை நிறுத்திவிடுவார்கள்" என்று கூறியிருக்கிறார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "இந்த போர் ஹைபிரிட் முறையில் துபாயில் நடைபெறுமா அல்லது இப்போதாவது பாகிஸ்தானுக்கு வருவார்களா?" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications