அதெப்படி முடியும்.. செக்கிழுத்தவர் சாவர்க்கர்.. அவரது தேசபக்தியை சந்தேகப்படுவதா?.. அமித்ஷா காட்டம்

சாவர்க்கரின் தேசபக்தியை சந்தேகப்பட முடியாது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

போர்ட்பிளேர்: ''சாவர்க்கரின் வாழ்க்கையை ஒருவர் எப்படி சந்தேகப்பட முடியும்? அவரது தேசபக்தியை எப்படி சந்தேகப்பட முடியும்? இந்த தேசத்துக்காக 2 ஆயுள் தண்டனைகளை சாவர்க்கர் அனுபவித்தார்... ஜெயிலில் மாட்டைப் போல் செக்கு இழுத்தார்... அவரைப் பற்றிப் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும்" என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

வீர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டு விழா 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்தது.. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசும்போது ஒருசில விஷயங்கள் சாவர்க்கர் குறித்தும் குறிப்பிட்டார்.

"மகாத்மா காந்தியின் அறிவுரைப்படியே, சாவர்க்கர் கருணை மனுவை எழுதினார்... சாவர்க்கருக்கு எதிரான ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்லும் போக்கு இங்கு அதிகரித்து விட்டது.. சாவர்க்கர் பலமுறை மன்னிப்பு கடிதங்கள் எழுதி கொடுத்ததால்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சிலர் உண்மைகளை மறைத்து பொய்களை சொல்லி வருகின்றனர்.

 கருணை மனு

கருணை மனு

ஆனால், ஒரு கைதிக்கு கருணை மனு தாக்கல் செய்ய உரிமை இருக்கிறது என்றாலும், அவர் தன்னுடைய விடுதலைக்காக கருணை மனுக்களை தாக்கல் செய்யவில்லை என்பதுதான் உண்மை. ..காந்தியின் அறிவுறுத்தல்படிதான் அந்த கருணை மனுவை தந்தார்.. சாவர்க்கரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தவரும் காந்திதான்" என்றார்.

தீண்டாமை

தீண்டாமை

அதுமட்டுமல்ல, அடிமை சங்கிலியின் பிணைப்பை உடைக்க மக்களை ஊக்குவித்தவர் சாவர்க்கர்.. தீண்டாமை, பெண் உரிமை போன்ற சமூக தீமைகளுக்கு எதிராக பொங்கியவர்.. சாவர்க்கரின் அரசியல் சிந்தனைகளை பாசிசத்தோடு இணைத்து பேசுகிறார்கள்.. தீவிர இந்துத்துவா சிந்தனை கொண்டவர்தான், ஆனால், கடைசி வரை ஒரு எதார்த்தவாதியாக செயல்பட்டவர்" என்றும் ராஜ்நாத்சிங் கூறியிருந்தார்.

 அமித்ஷா

அமித்ஷா

மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தன.. அந்த வகையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதுகுறித்து பதிலடி தந்துள்ளார்.. போர்ட் ப்ளேயருக்கு 75-வது சுதந்திர தின விழாவையொட்டி நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றார்... அப்போது அவர் பேசும்போது, "சாவர்க்கரின் வாழ்க்கையை ஒருவர் எப்படி சந்தேகப்பட முடியும்?

கொடுமை

கொடுமை

இந்த நாட்டுக்காக 2 ஆயுள் தண்டனைகளை அனுபவித்தவர் அவர்.. ஜெயிலில் செக்கு இழுத்தார்.. எத்தனையோ கொடுமையை அனுபவித்தார்.. அவரை பற்றி பேசுபவர்கள் இதற்கெல்லாம் முதலில் வெட்கப்பட வேண்டும்.. சாவர்க்கருக்கு என்ன குறை இருந்தது? நல்ல வசதியானவர்.. சுகபோக வாழ்க்கை இருந்தது.. ஆனாலும், எதற்காக கடினமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார்.. நமக்காக, இந்த மண்ணுக்காகதான் தன் உயிரையே தியாகம் செய்தார்..

 தேச பக்தி

தேச பக்தி

செல்லுலார் ஜெயிலை போல சிறந்த புனிதஸ்தலம் வேறு எதுவும் இருக்க முடியாது. அந்த ஜெயிலில் 10 வருஷங்கள் கொடுமையை அவர் அனுபவித்தார்.. எவ்வளவு துன்பம் வந்தபோதிலும் துணிந்துதான் நின்றார்.. வீரத்துடன்தான் அதை எதிர்கொண்டார்.. இந்த நாட்டிலுள்ளோர் பெரும்பாலும் சுதந்திரம் பெற்றதற்கு பிறகுதான் பிறந்துள்ளனர்.. அதனால் தேசத்துக்காக உயிரை தியாகம் செய்யும் வாய்ப்பு இருந்திருக்காது..

 மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

இந்த செல்லுலார் சிறைக்கு வந்தவர்களில் பெரும்பாலும் மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான்.. இந்த தேசத்துக்காக வாழுங்கள் என்று இன்றைய இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.. அப்படி இல்லாவிட்டால், இந்த சிறைக்கு வந்து, இங்குள்ள நினைவிடங்களைக் கண்டு அஞ்சலியாவது பொதுமக்கள் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+