நள்ளிரவில் குலுங்கிய பூமி! ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. 4.1 என ரிக்டரில் பதிவு.. மக்கள் ஷாக்
காபூல்: ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் திடீரென ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் அதிர்ஷ்டவசமாக பல நிலநடுக்கங்கள் அதிர்வை மட்டுமே ஏற்படுத்தி செல்கின்றன. இருப்பினும் சில நடுக்கங்களில் கட்டடங்கள் இடிந்து உயிரிழப்புகள் ஏற்படுவது அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அங்கு வசிக்கும் மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் தூக்கத்தில் இருந்தவர்கள் கண்விழித்து வீடுகளை விட்டு வெளியே வந்து திறந்த வெளியில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தை தேசிய நிலஅதிர்வு மையம் பதிவு செய்துள்ளது. இதுபற்றி அந்த மையம் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஆப்கானிஸ்தானில் பூமிக்கடியில் 73 கிலோமீட்டர் ஆழத்தில் நள்ளிரவு 12.03 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகி உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் தொடர்பாக வெளியான முதற்கட்ட தகவலில் அதிர்ஷ்டவசமாக உயிர் பலி எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் பிற பாதிப்புகள் குறித்த எந்த விபரமும் உடனடியாக தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications