அதிகாலையிலேயே குலுங்கிய பூமி.. பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டரில் 5.2 என பதிவு - மக்கள் ஷாக்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று அதிகாலையில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் முல்தான் நகரில் இருந்து 149 கிலோமீட்டருக்கு மேற்கே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலை கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் பதிவானதால் மக்கள் அச்சமடைந்தனர்.
நம் நாட்டின் அண்டை நாடான பாகிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அதிகாலையில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாகிஸ்தானின் முல்தான் நகர் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலையில் மக்கள் வழக்கம்போல் தங்களின் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பூமி குலுங்கி நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி வந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் வீட்டில் உள்ள பொருட்கள் குலுங்கி விழுந்தன. பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நிலஅதிர்வு மையம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் சார்பில், ‛‛பாகிஸ்தானில் இன்று அதிகாலை 3.54 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.2 என பதிவாகி உள்ளது.
அதேபோல் ஜெர்மன் புவிஅறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில், ‛‛மத்திய பாகிஸ்தானில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் முல்தானுக்கு மேற்கே சுமார் 149 கிலோமீட்டர் (92.5 மைல்) தொலைவில் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டு இருந்தது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications