நீச்சல் குளத்தில் பெண்களுக்கு பாலியல் சீண்டல்.. இந்திய மருத்துவர் சிங்கப்பூரில் சிறையில் அடைப்பு!
சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்ற இந்திய மருத்துவர் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்த நான்கு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்ற இந்திய மருத்துவர் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்த நான்கு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்திய மருத்துவர் ஜகதீப் சிங் அரோரா. 46 வயதான இவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மகள் மற்றும் மனைவியுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
அங்குள்ள பிரபல ஹோட்டலில் குடும்பத்துடன் தங்கியிருந்தார் அரோரா. இந்நிலையில் கடந்த ஜூன் 28ஆம் தேதி இரவு 9 மணியளவில் அங்கிருந்த நீச்சல் குளத்தில் குடும்பத்துடன் குளித்துள்ளார் அரோரா.

பாலியல் தொல்லை
அப்போது அந்த நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சக பெண்களுக்கு மகள் மற்றும் மனைவி முன்னிலையில் அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

லிதுவேனியா சுற்றுலாப் பயணி
அவர்களில் ஒருவர் லிதுவேனியாவை சேர்ந்த 25 வயதான சுற்றுலாப்பயணி ஆவார். அந்த ஹோட்டலின் 57வது மாடியில் உள்ள நீச்சல் குளத்தில், அன்றிரவு 9 மணியளவில் அங்கு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்.

செக்யூரிட்டியிடம் புகார்
அப்போது தண்ணீருக்குள் இருந்தபடியே அந்த பெண்ணை நெருங்கிய அரோரா அவரின் பின்பக்கத்தை தொட்டுள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவிக்கவே விஷயம் செக்யூரிட்டி வரை சென்றது.

வயிற்றை தொட்டு
அடுத்த சில நிமிடங்களிலேயே நீச்சல் குளத்தில் இருந்த கொரிய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வயிற்றை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் குளத்தில் இருந்து வெளியேறிய அரோரா பின்னர் மீண்டும் வந்து அந்தப் பெண்ணின் பின்பக்கத்தை தொட்டுள்ளார்.

மது போதையில்
மேலும் அவர் 4வதாக ஒரு பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் சீண்டலில் ஈடுபடுவதற்கு முன்னதாக அரோரா மது அருந்தியிருந்ததாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மகளின் முன்னிலையில்
தனது 11 வயது மகளின் முன்னிலையில் மருத்துவர் அரோரா இந்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவில் அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை.

2 வாரம் சிறையிலடைப்பு
இந்நிலையில் சிங்கப்பூரில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சிக்கியுள்ளார் அரோரா. அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் நேற்று 2 வார நீதிமன்ற காவல் விதித்துள்ளது.

மூன்று அபராதங்கள்
குற்றச்சாட்டு நிரூபணம் ஆகும் நிலையில் அவர் இரண்டு ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்படலாம், அபராதம் விதிக்கலாம், முறியடிக்கப்படலாம் அல்லது மூன்று அபராதங்களுடன் தண்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications