தம்மாத்தூண்டு "கோக் கேனை" வைத்து ரஷ்ய விமானத்தைத் தகர்த்ததா ஐஎஸ்ஐஎஸ்... ??
வாஷிங்டன்: ஒரு சாதாரண சோடா கேனுக்குள் வெடிகுண்டு வைத்து அதைக் கொணடு ரஷ்ய விமானத்தைத் தகர்த்ததாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக படத்தையும் அவர் போட்டுள்ளனர்.
ஆனால் இவ்வளவு சிறிய சோடா கேனில் குண்டை வைத்து ஒரு பெரிய விமானத்தை தகர்க்க முடியுமா, சாத்தியம் உள்ளதா என்பது குறித்து நிபுணர்கள் ஆய்வில் இறங்கியுள்ளனர்.
அந்த சோடா கேன், சாதாரண பெப்சி, கோக் கேன் போல உள்ளது. அந்த கேனுக்குப் பக்கத்தில் வெடிகுண்டுகளை இணைப்பதற்கான வயர்களையும் போட்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பு. இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

சினாய் தீபகற்பத்தில்
கடந்த மாதம் ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று சினாய் தீபகற்பப் பகுதியில் தகர்க்கப்பட்டது. அதில் இருந்த 224 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் தாங்கள்தான் இதைத் தகர்த்ததாக ஐஎஸ் தீவிரவாதிகள் கூறியிருந்தனர்.

புதிய தகவல்
இந்த நிலையில் எப்படி விமானத்தைத் தகர்த்தோம் என்பது குறித்த புதிய தகவல் ஒன்றை ஐஎஸ் அமைப்பு தனது ஆங்கில இதழான டபிக்கில் தெரிவித்துள்ளது. அதில் ஒரு சோடா கேனையும், சில வயர்களையும் போட்டு, இதேபோன்ற குண்டு கொண்டுதான், ரஷ்ய விமானத்தைத் தகர்த்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

டுபாக்கூர் தகவலா
இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில், இது அனைவரையும் திசை திருப்பும் நோக்கத்துடன் வெளியிடப்பட்ட தகவலாக தெரிகிறது. இந்த சின்ன சோடா கேனை வைத்து ஒரு பெரிய விமானத்தைத் தகர்க்க முடியும் என்பது சந்தேகத்திற்குரியது என்று கூறியுள்ளனர்.

திட வெடிகுண்டாக இருக்கலாம்
இருப்பினும் இவர்கள் போட்டுள்ள புகைப்படத்தை வைத்து சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது வெடிகுண்டு என்பதில் சந்தேகம் இல்லை. மிகவும் நுனுக்கமாக இதை தயாரித்துள்ளதாக தெரிகிறது. மேலும் இது திட வெடிகுண்டாக இருக்கலாம். திரவ வெடிகுண்டாக இருக்க வாய்ப்பில்லை.

மிகவும் அழுத்தமாக
இந்த சோடா கேனை மட்டும் வைத்து முழுமையான முடிவுக்கு வர முடியாது. அதேசமயம், இந்த சோடா கேனுக்குள் எவ்வளவு அதிக வெடிபொருட்களை திணிக்க முடிகிறதோ அவ்வளவு திணித்து வைத்து பெரும் சேதத்தை ஏற்படுத்த முயன்றிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

விமானம் தகர்ந்திருக்க வாய்ப்பில்லை
அதேசமயம், இந்த சோடா கேன் வெடிகுண்டால் விமானம் தகர்ந்திருக்க வாய்ப்பில்லை. அதேசமயம், இந்த திடீர் தாக்குதலால் அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்த விமானம் சேதத்தை சந்தித்து நிலைகுலைந்து தாறுமாறாக பறந்து கீழே விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ரிமோட் கன்ட்ரோல்
இந்த சோடா கேன் வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக விமானத்திற்குள் இருந்தபடி வெடிக்க வைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications