கொளுத்தும் வெயில்... இஸ்ரேல் ஜூவில் "ஜில் ஜில் கூல் கூல்" கவனிப்புக்குள்ளாகும் விலங்குகள்!
ஜெருசலேம்: கோடையின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்க இஸ்ரேல் வனவிலங்கு பூங்காக்களில் விலக்குகளுக்கு ‘ஐஸ்' உணவுகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவைப் போலவே உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் உக்கிரம் அதிகமாகவே உள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஆண்டுக்கு ஆண்டு வெப்பம் மற்றும் மழையின் அளவு அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க மனிதர்கள் பல்வேறு வழிகளைக் கடைபிடிக்கிறார்கள். வெளியில் செல்லும் போது குடை, தொப்பி உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்வது, வீடுகளில் ஏசி பயன்படுத்துவது, குளிர்ச்சியான உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது என.

விலங்குகள்...
ஆனால், மனிதர்களேத் தாங்கிக் கொள்ள முடியாத வெயிலை விலங்குகள், பறவைகள் எப்படி சமாளிக்கும். அதிலும், பனிப்பிரதேசங்களில் வாழ்வதற்குரிய உடலமைப்பை பெற்ற விலங்குகளை வெயில் காலங்களில் வனவிலங்கு உயிரியல் பூங்காக்களில் பராமரிப்பது சற்று சிரமமான விஷயம் தான்.

ஜெருசலேம் உயிரியல் பூங்கா...
இதனால் தான் இஸ்ரேல் நாட்டில் ஜெருசலேமில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவில் சில விஷேச வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அங்குள்ள விலங்குகளின் அறைகளில் உள்ள ஜன்னல்கள் காற்றோட்டத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

ஜில் ஜில் உணவு...
அதோடு, விலங்குகளின் இருப்பிடங்களைச் சுற்றி தண்ணீர் நிரம்பிய கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. விலங்குகளுக்கான உணவுகளை ஐஸ் கட்டியில் புதைத்து நீரில் தூக்கி வீசுகிறார்கள் பூங்கா ஊழியர்கள்.

நீரில் விளையாடி...
அவற்றை நீரில் விளையாடியபடியே மகிழ்ச்சியாக சாப்பிட்டு கோடையைச் சமாளிக்கின்றன அங்கு வாழும் விலங்குகள். இதனால், அவற்றிற்கு கோடையின் உக்கிரம் அவ்வளவாக தெரிவதில்லை என்கிறார்கள் பூங்கா ஊழியர்கள்.

காற்றோட்டம்...
பூங்கா காப்பாளர் டென்னிஸ் ஸ்மித் கூறுகையில், அவற்றின் அறைகளின் கதவுகளைத் திறந்து விடுவதன் மூலம் அவற்றுக்கு சற்று வெட்கை தணிகிறது. மேலும் உணவு, பழங்கள் உள்ளிட்டவற்றை ஐஸ் கட்டிக்குள் வைத்துக் கொடுக்கும்போது அவை மகிழ்ச்சியுடன் அவற்றை சாப்பிடுகின்றன என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications