Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கதேசத்தில் ஒரே வாரத்தில் 2வது இந்து நபர் அடித்து கொலை.. யார் இந்த அம்ரித் மண்டல்? ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தில் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது இந்து நபர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். ராஜ்பரி மாவட்டத்தில் நேற்று முதல்நாள் இரவு, 29 வயதான அம்ரித் மண்டல் படுகொலை செய்யப்பட்டார். முன்னதாக, திபு சந்திர தாஸ் கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்ரித் மண்டல் மரணம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சாம்ராட் என்றும் அறியப்பட்ட அம்ரித் மண்டல், பண்சா உபஜிலா ஹோசைந்தங்கா என்ற பகுதியில் உள்ள சந்தையில் புதன்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் தாக்குதலுக்குள்ளானார். படுகாயமடைந்த அவரை காவல்துறையினர் மீட்டு, பண்சா உபஜிலா சுகாதார வளாகத்தில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அதிகாலை 2 மணிக்கு அவர் உயிரிழந்ததாக உறுதி செய்தனர்.

bangladesh

யார் இந்த அம்ரித் மண்டல்?

காவல்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அம்ரித் மண்டல் ஹோசைந்தங்கா கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் "சாம்ராட் பஹிணி" என்ற உள்ளூர் குழுவின் தலைவராகவும், தேடப்படும் குற்றவாளியாகவும் அறியப்பட்டார். லோக்கல் கேங் லீடராக இவர் வலம் வந்துள்ளார். மண்டல் மீது கொலை வழக்கு உட்பட குறைந்தபட்சம் இரண்டு வழக்குகள் பண்சா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக இந்தியாவில் தலைமறைவாக இருந்த அவர் சமீபத்தில் ஊர் திரும்பி, ஷாஹிதுல் இஸ்லாம் என்ற கிராமவாசியை பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. புதன்கிழமை இரவு, மண்டல் தனது குழுவினருடன் ஷாஹிதுல் வீட்டில் பணம் கேட்க சென்றுள்ளார். வீட்டிலிருந்தவர்கள் 'திருடர்கள்!' என அலறவே, திரண்ட பொதுமக்கள் சாம்ராட்டை சுற்றி வளைத்துத் தாக்கினர்.

அவரின் கூட்டாளிகள் தப்பி ஓடிய நிலையில், அம்ரித் மண்டல் மட்டும் தனியாக மாட்டிய நிலையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டார். அம்ரித் மண்டலிடம் இருந்த இரண்டு துப்பாக்கிகளை காவல்துறையினர் கைப்பற்றினர். தாக்குதலில் ஈடுபட்டோரை அடையாளம் காணவும், சம்பவத்தின் பின்னணியை அறியவும் விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அம்ரித் மண்டல் படுகொலை

அம்ரித் மண்டலின் படுகொலை மத மோதல் அல்ல, பணம் பறிப்புடன் தொடர்புடைய வன்முறை மோதல்.. இது மத வெறுப்பு இல்லை.. வெறுமனே ரவுடிக்கு எதிராக அப்பகுதி மக்கள் கொதித்து எழுந்ததே காரணம் என்று வங்கதேச இடைக்கால அரசு அறிக்கை வெளியிட்டது. மண்டல் பணம் கேட்டு மிரட்டச் சென்றபோது உள்ளூர்வாசிகளுடனான மோதலில் கொல்லப்பட்டார் என விசாரணைகள் உறுதிப்படுத்துவதாக அரசு கூறியது.

இத்தகைய சட்டவிரோத செயல்களையும் கும்பல் வன்முறையையும் அரசு ஒருபோதும் ஆதரிக்காது என திட்டவட்டமாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 'இந்தச் சம்பவத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்ட அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் அந்த அறிக்கையில் எச்சரித்துள்ளது.

மேலும், அவரின் மத அடையாளத்தைப் பெரிதாக்கி, இச்சம்பவத்தை மதத் தாக்குதலாகக் சித்தரிக்க சில குழுக்கள் முயல்வதாக அரசு கவலை தெரிவித்தது. சமூக நல்லிணக்கத்தைக் குலைத்து, சட்டம் ஒழுங்கை மோசமாக்கும் ஆதாரமற்ற மற்றும் தீங்கிழைக்கும் கூற்றுக்கள் கண்டிக்கப்பட்டன.

இது ஒரு வாரத்திற்குள் நம் அண்டை நாட்டில் நடந்த இரண்டாவது இந்து நபர் படுகொலை சம்பவம். கடந்த டிசம்பர் 18 அன்று, திபு சந்திர தாஸ் என்ற இந்து ஆடைத் தொழிற்சாலை ஊழியர், மைமன்சிங் நகரில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் கும்பலால் அடித்துத் தீவைத்துக் கொல்லப்பட்டார்.

இரண்டாவது இந்து படுகொலை

பாலுக்கா உபஜிலாவின் ஸ்கொயர் மாஸ்டர் பாரி பகுதியிலுள்ள தூபாலியா பரா என்ற இடத்தில் நடந்த இச்சம்பவத்தில், 25 வயதான தாஸ், பயனியர் நிட் காம்போசிட் ஃபேக்டரியில் பணிபுரிந்தார். அவர் இஸ்லாம் மதத்திற்கு எதிராக பேசியதாக கூறப்படுகிறது. அவர் இஸ்லாமிற்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டுகள் அப்பகுதியில் பரவி பதற்றத்தை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த ஒரு மத பிரிவு கும்பல் தாஸைக் கடுமையாகத் தாக்கி கொடூரமாக அடித்துக் கொன்றது.

கொல்லப்பட்ட திபுவின் உடலை மரத்தில் தொங்கவிட்டு தீ வைத்த அந்தக் கும்பல், இக்கோரச் சம்பவத்தை தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களில் பதிவு செய்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திபு சந்திர தாஸ் மீதான இத்தகைய படுகொலைக்கு இந்தியாவில் கடும் கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+