பாகிஸ்தானில் தொடரும் 'சம்பவங்கள்'.. இந்தியாவுக்கு எதிரான மேலும் ஒரு லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக் கொலை!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்த மேலும் ஒரு லஷ்கர் இ தொய்பா இயக்க பங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. கனடாவில் இருந்து சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர். பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் தனிநாடு கோர்க்கைக்கான பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர்.

கனடாவில் சீக்கிய பயங்கரவாதிகள் குழு மோதல்களாலும் மர்ம நபர்களாலும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் கனடா அரசு இந்தியா மீது இந்த படுகொலைகளுக்கு குற்றம்சாட்டியது. இதனால் இந்தியா- கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதேபோல பாகிஸ்தானிலும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருகின்றனர். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் மகன் மர்ம நபர்களா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பின்னர் இந்திய எதிர்ப்பு பிரசாரகர் தாரீக் ஜமீல் மகன் அஸீம் ஜமீல் மர்ம நபர்களால் அண்மையில் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சஞ்சுவான் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி க்வாஜா ஷாகித் அலியாஸ் மியா முஜாஹித் சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்களா சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தலை இல்லாத சடலம்தான் மீட்கப்பட்டது. இதேபோல பதன்கோட் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஷாகீத் லத்தீப் என்ற பயங்கரவாதியும் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மசூதிக்குள் நுழைந்து ரியாஸ் அகமது என்ற பயங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் மேலும் ஒரு லஷ்கர் இயக்க பயங்கரவாதி அக்ரம்கான் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அக்ராம் கான் என்ற அக்ரம் காஜி, 2018 முதல் 2020-ம் ஆண்டு வரை லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட் சேர்ப்பில் ஈடுபட்டவர்; பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்தவர். தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டு வரும் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications