மீண்டும் நிலநடுக்கம்.. சிரியாவில் அடுக்குமாடி கட்டிடம் நொறுங்கி விழுந்தது! மீட்பு பணிகள் தொய்வு
கடந்த 12 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள இரண்டாவது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். இதற்கு முன்னர் 1939ம் ஆண்டு ஒரு முறை மட்டும் இந்த அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டமாஸ்கஸ்: துருக்கியில் இன்று அதிகாலை ச
டமாஸ்கஸ்: துருக்கியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கம் அருகில் இருந்த சிரியாவிலும் உணரப்பட்டது. இந்நிலநடுக்கம் காரணமாக சிரியாவில் சுமார் 237 பேர் உயிரிழந்துள்ளனர். 639 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது துருக்கியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அது சிரியாவையும் பாதித்திருக்கிறது.
கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் 33 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் தற்போதுதான் இந்த அளவுக்கு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தொடக்கத்தில் சுமார் 100 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டது. ஆனால் மீட்பு பணிகள் தீவிரமடைந்த நிலையில், ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது வரை 912 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் காரணமாக மருத்துவமனைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் தொய்வு இருந்து வருகிறது. மீட்பு பணியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் முழு வீச்சில் களமிறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார்.

உதவி
நிலநடுக்கத்தால் உயிரிழந்த மக்களுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மட்டுமல்லாது மீட்பு பணிகளுக்கு படைகளை அனுப்பவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, "துருக்கியில் ஏற்பட்ட அபாயகரமான நிகழ்வை நாம் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதைவிட அதிகமாக பொருட் சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது. துருக்கிக்கு அருகில் உள்ள நாடுகள் கூட இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலநடுக்கத்தில் உயிர்களையும், உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இம்மகளுக்கு 140 கோடி இந்தியர்களும் உறுதுணையாக உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

பேரிடர் மீட்பு படையினர்
மட்டுமல்லாது இந்தியாவிலிருந்து இரண்டு தேசிய பேரிடர் மீட்பு படையினர் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு குழுவிலும் தலா 50 வீரர்கள் இருக்கின்றனர். அதேபோல ஐரோப்பிய யூனியனும் 10 மீட்புப்படைகளை துருக்கிக்கு அனுப்பி வைத்துள்ளது. இருப்பினும் கூடுதல் படைகளின் தேவைகள் இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறி வருகின்றனர். மீட்பு பணிகள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், மறுபுறம் மோசமான வானிலை காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் மற்றும் அதன் தலைநகரான அங்கராவில் கடுமையான பனி பொழிவு நீடித்து வருகிறது.

இரண்டாவது நிலநடுக்கம்
இதன் காரணமாக இங்கிருந்து கிழக்கு துருக்கிக்கு இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே தலைநகரிலிருந்து மீட்பு பணிகளுக்காக செல்லும் படைகள் தாமதமாகவே சென்றிருக்கின்றன. துருக்கியை போலவே சிரியாவும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. சிரியாவில் 560க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகளையடுத்து மக்கள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விடுகையில் தற்போது மற்றொரு நிலநடுக்கம் துருக்கியில் பதிவாகியுள்ளது. இந்த முறை ரிக்டர் அளவில் 7.7ஆக இது பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் சிரியாவிலும் உணரப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு
இரண்டாவது நிலநடுக்கம் காரணமாக வடக்கு சிரியாவின் ஜராபுலஸ் நகரில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ டிவிட்டரில் வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை துருக்கி மற்றம் சிரியாவை சேர்த்து சுமார் 1200 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications